யூரோ கோப்பை: 12 வருடங்களுக்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஸ்பெயின்!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸை வென்றது ஸ்பெயின்.
2ஆவது கோல் அடித்த மகிழ்ச்சியில் ஸ்பெயின் அணியினர்.
2ஆவது கோல் அடித்த மகிழ்ச்சியில் ஸ்பெயின் அணியினர். Manu Fernandez
Published on
Updated on
1 min read

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயின் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தேர்வாகியது.

இந்தப் போட்டியில் மிகவும் குறைவான வயதில் (16 ) ஐரோப்பிய கண்டத்தில் கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார் ஸ்பெயின் அணியைச் சேர்ந்த லாமின் யமல்.

ஸ்பெயின் அணியின் 21,25 ஆவது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார்கள். பிரான்ஸ் தரப்பில் 9ஆவது நிமிடத்தில் ஒரு கோல் மட்டும் அடிக்க முடிந்தது.

2ஆவது கோல் அடித்த மகிழ்ச்சியில் ஸ்பெயின் அணியினர்.
டி20 உலகக் கோப்பை தோல்வி: தேர்வுக்குழு தலைவரை நீக்கியது பாக். கிரிக்கெட் வாரியம்!

இதற்கு முன்பாக ஸ்பெயின் அணி 1964, 2008, 2012இல் கோப்பையை வென்றுள்ளது. தற்போது நான்காவது கோப்பையை எதிர்நோக்கியுள்ளது.

நாளை (ஜூலை 11) நள்ளிரவு 12.30 மணிக்கு 2ஆவது அரையிறுதியில் நெதர்லாந்து இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி ஜூலை 15 நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சியில் ஸ்பெயின் அணியினர்.
மகிழ்ச்சியில் ஸ்பெயின் அணியினர்.Matthias Schrader

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com