ஐசிசியின் மோசமான திட்டமிடல்! உலகக் கோப்பை நிர்வாக குறைபாடுகள் குறித்து ஸ்டார்க் விமர்சனம்!

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் நிர்வாக குறைபாடுகளை விமர்சித்துள்ளார்.
மிட்செல் ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க்படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா / எக்ஸ்
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பை சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணி குரூப் 8 சுற்றுடன் வெளியேறியது.

முக்கியமான குரூப் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தானுடன் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் ஆஸி. நட்சத்திர வீரர் மிட்செல் ஸ்டார்க் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ஆஸ்டன் ஏகர் சேர்க்கப்பட்டார். அவர் எந்த விக்கெட்டுகளையும் எடுக்காமலே பந்து வீசியதும் குறிப்பிடத்தக்கது.

மிட்செல் ஸ்டார்க்
15 முறை சாம்பியன் அணியை அரையிறுதியில் வீழ்த்தியது கொலம்பிய அணி!

இது குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ஸ்டார். அவர் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

எனக்கு பதிலாக அஸ்டன் ஏகரை தேர்வு செய்ததில் ஆச்சரியமாக பார்க்கவில்லை. இரண்டு உலகக் கோப்பைகள் உடனுக்குடன் வந்தன. இதற்கு முன்பான செயின்ட் வின்சென்ட் மைதானத்தில் சுழல்பந்து நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதால் அணி நிர்வாகம் ஏகரை தேர்ந்தெடுத்திருக்கலாம்.

பவர்பிளேவில் அஸ்டன் ஏகர் நன்றாகத்தான் பந்துவீசினார். ஆப்கானிஸ்தான் அணி ஆடுகளத்தை நன்றாக கணித்து ஸ்பின்னரை நன்றாக விளையாடினார்கள். இறுதியில் நாங்கள் சொதப்பியதால் தோற்றிவிட்டோம். முக்கியமாக ஃபீடிங்கில் செய்த தவறு தோல்விக்கு முக்கிய காரணம்.

மிட்செல் ஸ்டார்க்
தோனிதான் காரணம்: ருதுராஜ் பகிர்ந்த வேடிக்கையான பதிவு!

அடுத்து இந்தியாவுடன் ஆஸ்திரேலியா தோற்றதால் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறியது. இங்கிலாந்துக்கு முன்பாக நாங்கள் வென்றுவிட்டோம். ஆனால் முதலிலேயே முடிவு செய்யப்பட்டதால் நாங்கள் வேறு குரூப்புக்கு மாற்றப்பட்டோம். மே.இ.தீ. சுற்றி வந்து விளையாடுவது கடினம். ரசிகர்களுக்கு எங்கு விளையாட வேண்டுமென்பது தெரியும். ஆனாலும் ரசிகர்கள் முழுவதுமாக பங்கேற்க முடியவில்லை. அதன் காரணம் என்ன?

2 இரவு போட்டிகள் நடந்தன. அடுத்த போட்டி காலையில் நடந்தது. இது சிறப்பான திட்டமிடல் கிடையாது. செயின்ட் வின்சென்ட் விமானம் தாமதமாக வந்தது. விமான நிலையத்தில் இருந்து விடுதிக்கு வர 90 நிமிடங்கள் ஆனது. 10 மணிக்கு டாஸ் இருந்தது. ஐசிசி நிர்வாகம் தவறாக திட்டமிட்டுள்ளது.

மே.இ.தீ. அணியில் பயணிப்பது எளிமையான விசயமில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com