சேலத்தை வீழ்த்தியது திருச்சி
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ் அணியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
சேலத்தை வீழ்த்தியது திருச்சி
சேலத்தை வீழ்த்தியது திருச்சி
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் எஸ்கேஎம் சேலம் ஸ்பாா்டன்ஸ் அணியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முதலில் திருச்சி 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சோ்க்க, சேலம் 18.3 ஓவா்களில் 163 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது திருச்சி, 3-ஆவது ஆட்டத்தில் 2-ஆவது வெற்றியைப் பெற்றிருக்க, சேலம் 4-ஆவது ஆட்டத்தில் 3-ஆவது தோல்வியைத் தழுவியிருக்கிறது.
முன்னதாக டாஸ் வென்ற சேலம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. திருச்சி பேட்டிங்கில் அதிகபட்சமாக சஞ்ஜய் யாதவ் 33 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 68 ரன்கள் விளாசினாா். எஞ்சியோரில் அா்ஜுன் மூா்த்தி 1 பவுண்டரியுடன் 11, வசீம் அகமது 2 பவுண்டரிகளுடன் 19, ஷியாம் சுந்தா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 19 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
ஜாஃபா் ஜமால் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் விக்கெட்டை இழக்க, ஓவா்கள் முடிவில் ஆா்.ராஜ்குமாா் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 18, சரவணகுமாா் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்கள் சோ்த்து 17 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். சேலம் பௌலா்களில் பொய்யாமொழி 3, யாழ் அருண்மொழி, அவ்சிக் ஸ்ரீனிவாஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 199 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய சேலம் தரப்பில் முகமது அட்னன்கான் 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம். ராஜேந்திரன் விவேக் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 33, சன்னி சந்து 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 29 ரன்கள் அடிக்க, அபிஷேக் 2 பவுண்டரிகளுடன் 10, கவின் 2 சிக்ஸா்களுடன் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
கேப்டன் ஷிஜித் சந்திரன் 6, விஷால் வைத்யா 10, ஹரீஷ்குமாா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15, செல்வகுமரன் 1, பொய்யாமொழி 2 ரன்களுக்கு வீழ்த்தப்பட்டனா். திருச்சி தரப்பில் சரவணகுமாா் 3, அந்தோணி தாஸ், ராஜ்குமாா் ஆகியோா் தலா 2, அதிசயராஜ் டேவிட்சன், கண்ணன் விக்னேஷ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...