கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்ட ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளனர்.
கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்ட ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்!
படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 26) தொடங்கியது. டாஸ் வென்று முதல் இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 282 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பிரத்வெயிட் 61 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஜேசன் ஹோல்டர் அதிகபட்சமாக 59 ரன்களும், ஜோஷ்வா டா சில்வா 49 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் மற்றும் சோயப் பஷீர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்ட ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்!
பாரீஸ் ஒலிம்பிக்கில் சீனாவுக்கு 2-வது தங்கம்!

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இங்கிலாந்து அணியின் முன்வரிசை ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். ஸாக் கிராலி (18 ரன்கள்), பென் டக்கெட் (3 ரன்கள்), மார்க் வுட் (0 ரன்), ஆலி போப் (10 ரன்கள்) மற்றும் ஹாரி ப்ரூக் (2 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இந்த நிலையில், ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடினர். இந்த இணை 100 ரன்களுக்கும் அதிகமாக சேர்த்து விளையாடி வருகிறது. உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 58 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 48 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து மீட்ட ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ்!
புதிய பொறுப்பு, அதிக எதிர்பார்ப்பு..! கம்பீருக்கு ஆலோசனை வழங்கிய திராவிட்!

இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் 125 ரன்கள் பின் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com