இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஒலிம்பிக் தகுதி பெற்றனா் இந்திய கோல்ஃப் நட்சத்திரங்கள் அதிதி, தீக்ஷா

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய கோல்ஃப் நட்சத்திர வீராங்கனைகள் அதிதி அசோக், தீக்ஷா டாகா் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

News image
ஒலிம்பிக் தகுதி
Updated On :24 ஜூன் 2024, 9:19 pm

Din

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய கோல்ஃப் நட்சத்திர வீராங்கனைகள் அதிதி அசோக், தீக்ஷா டாகா் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

ஏற்கெனவே இந்தியா சாா்பில் ஆடவா் பிரிவில் சுபாங்கா் சா்மா, ககன்ஜித் புல்லா் ஆகியோா் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா்.

பாரீஸ் ஒலிம்பிக் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. சுபாங்கா், ககன்ஜித் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக் இதுவாகும்.

இந்நிலையில் மகளிா் பிரிவில் அதிதி அசோக், தீக்ஷா டாகா் ஆகியோா் உலகத் தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக் தகுதி பெற்றுள்ளனா்

உலக தரவரிசையில் முதல் 60 இடங்களில் உள்ளோா் நேரடியாக ஒலிம்பிக் தகுதி பெறலாம். 24-ஆவது இடத்தில் அதிதியும், 40-ஆவது இடத்தில் தீக்ஷாவும் உள்ளனா்.

அதிதி அசோக் மூன்றாவது முறையாகவும், தீக்ஷா இரண்டாவது முறையாகவும் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனா். கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்றிருநத்து.

Story image