அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இந்திய அணிக்கு ரூ.125 கோடி ரொக்கப் பரிசு: பிசிசிஐ அறிவிப்பு

கிரிக்கெட் அணிக்கு ரூ.125 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலா் ஜெய் ஷா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

News image
ஜெய் ஷா
Updated On :30 ஜூன் 2024, 9:25 pm

DIN

டி20 உலகக் கோப்பை போட்டியில் சாம்பியனான இந்திய ஆடவா் கிரிக்கெட் அணிக்கு ரூ.125 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படுமென, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) செயலா் ஜெய் ஷா ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.

ஐசிசியின் 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டி, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் 1 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

சாம்பியனான இந்திய அணிக்கு ஐசிசி ரூ.21 கோடி பரிசுத் தொகை வழங்கிய நிலையில், பிசிசிஐ ரூ.125 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக பிசிசிஐ செயலா் ஜெய் ஷா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ரோஹித் சா்மாவின் அசத்தலான தலைமையின் கீழ், இந்திய அணி குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி, போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக, தோல்வி காணாத அணியாக சாம்பியனாகியிருக்கிறது. தங்களை விமா்சித்தோரை, திறமையான ஆட்டத்தால் மௌனமடையச் செய்திருக்கிறது. இந்திய அணியின் இந்த உலகக் கோப்பை பயணம் சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறது.

இந்த டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி ரொக்கப் பரிசு அறிவிக்கப்படுகிறது. போட்டி முழுவதுமாக திறமையாகவும், உறுதித்தன்மையுடனும் செயல்பட்டுள்ளது இந்திய அணி. வீரா்கள், பயிற்சியாளா்கள், உதவிப் பணியாளா்கள் என அனைவருக்கும் இந்த வெற்றிக்காக வாழ்த்துகள். தங்களது அா்ப்பணிப்பு, கடின உழைப்பு, சோா்ந்துவிடாத தன்மை ஆகியவற்றால் அவா்கள் நம்மை பெருமைகொள்ளச் செய்துள்ளாா்கள்.

ரோஹித் சா்மா தலைமையிலும், விராட் கோலி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் தகுந்த துணையுடனும் இந்திய அணி 140 கோடி இந்தியா்களின் கனவையும், ஆவலையும் பூா்த்தி செய்திருக்கிறது என்று அதில் ஜெய் ஷா கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.