தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மீண்டது பெங்களூர்; வீழ்ந்தது மும்பை

மீண்டது பெங்களூா்; மும்பையை வீழ்த்தியது

News image
Updated On :12 மார்ச் 2024, 6:58 pm

புது தில்லி, மார்ச் 12: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 19}ஆவது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ûஸ செவ்வாய்க்கிழமை சாய்த்து, தொடர் தோல்வியிலிருந்து மீண்டது.

முதலில் மும்பை 19 ஓவர்களில் 113 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, பெங்களூர் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 115 ரன்கள் சேர்த்து வென்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர், பந்துவீசத் தீர்மானித்தது. மும்பை பேட்டிங்கில் சஜீவன் சஜனா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30, ஹேலி மேத்யூஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்கள் சேர்த்து வெளியேறினர்.

எஞ்சிய பேட்டர்களில் நடாலி ஸ்கீவர் 10, கேப்டன் ஹர்மன்பிரீத் கெüர் 0, எமிலியா கெர் 2, அமன்ஜோத் கெüர் 4, பூஜா வஸ்த்ரகர் 6, ஹுமாய்ரா காஸி 4, ஷப்னிம் இஸ்மாயில் 8, சாய்கா இஷாக் 1 ரன்னுக்கு விக்கெட்டை இழந்தனர்.

முடிவில் பிரியங்கா பாலா 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூர் பெüலிங்கில் எலிஸ் பெரி 6 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, சோஃபி மோலினுக்ஸ், சோஃபி டிவைன், ஆஷா சோபனா, ஷ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

பின்னர் பெங்களூர் இன்னிங்ஸில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 11, சோஃபி மோலினுக்ஸ் 9, சோஃபி டிவைன் 4 ரன்களுக்கு வெளியேறினர். எலிஸ் பெரி 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 40, ரிச்சா கோஷ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மும்பை பெüலர்களில் ஷப்னிம் இஸ்மாயில், ஹேலி மேத்யூஸ், நடாலி ஸ்கீவர் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.