முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி!

தில்லி கேப்பிடல்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி!

டபிள்யூபிஎல் இறுதிப்போட்டியில் தில்லி கேப்பிடல்ஸை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற டபிள்யூபிஎல் இறுதிப்போட்டியில் பெங்களூரு மற்றும் தில்லி அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி!
காயத்திலிருந்து மீண்டு வந்த நினைவுகளைப் பகிர்ந்த ஹார்திக் பாண்டியா!

தில்லி கேப்பிடல்ஸ் 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளைத் தவிர மற்ற யாரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. ஷஃபாலி வெர்மா அதிகபட்சமாக 44 ரன்களும், கேப்டன் லானிங் 23 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஸ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து மோலிநியூக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆஷா ஷோபனா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் சோஃபி டிவைன் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். ஆர்சிபி 49 ரன்களுக்கு முதல் விக்கெட்டினை இழந்தது. சோஃபி டிவைன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்கள் அடங்கும். அதன்பின் எல்லீஸ் பெரி, ஸ்மிருதி மந்தனா ஜோடி சேர்ந்தனர். இருப்பினும், ஸ்மிருதி மந்தனா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்தியது பெங்களூரு.

முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி!
அஸ்வினுக்கு புகழாரம் சூட்டிய முன்னாள் இந்திய வீரர்!

இதன்மூலம், முதல் முறையாக ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த ஆண்டு அறிமுக டபிள்யூபிஎல் சீசனில் மும்பை கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com