உலகக் கோப்பைத் தொடரின்போது ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்தது குறித்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹார்திக் பாண்டியா பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது பவுண்டரிக்கு சென்ற பந்தை காலால் தடுக்க முயன்றபோது ஹார்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின், உலகக் கோப்பைத் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் அவர் விளையாடவில்லை. தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணியை வழிநடத்தவுள்ளார்.
இந்த நிலையில், உலகக் கோப்பைத் தொடரின்போது ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வந்தது குறித்து அவர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: எனது கணுக்காலின் வெவ்வேறு பகுதிகளில் ஊசி செலுத்தப்பட்டது. கணுக்கால் வீக்கம் காரணமாக காலில் உறைந்த ரத்தம் அகற்றப்பட வேண்டியிருந்தது. உலகக் கோப்பைத் தொடரை விட்டுக்கொடுக்க எனக்கு விருப்பமில்லை. அணிக்காக எனது சிறப்பான பங்களிப்பை வழங்கினேன். அணியில் விளையாடுவதற்கு ஒரு சதவிகிதம் வாய்ப்பிருந்திருந்தால் கூட நான் எனது சிறப்பான பங்களிப்பை வழங்கியிருப்பேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்திய ஹார்திக் பாண்டியா!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹார்திக் பாண்டியா இல்லை! காரணம் கூறாத பிசிசிஐ!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்!

முழு உடல்தகுதி பெற்ற ரோஹித் சர்மா, ஹார்திக் பாண்டியா; ஒருநாள் தொடருக்குத் தயார்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




