தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

துளிகள்...

துளிகள்...

Updated On :20 மார்ச் 2024, 7:02 pm

ஹாக்கி ஃபைவ்ஸ் பிரிவில் முதல் முறையாக வெளியான சா்வதேச தரவரிசையில் ஆடவா், மகளிா் என இரு பிரிவுகளிலும் இந்திய அணி 2-ஆம் இடம் பிடித்துள்ளது. இடைநீக்கம் செய்யப்பட்ட சா்வதேச குத்துச்சண்டை சங்கத்தை (ஐபிஏ) தவிா்த்து, புதிதாக ஒரு அமைப்பை தேசிய சம்மேளனங்கள் ஏற்படுத்தாவிட்டால், 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டையை தவிா்க்க வேண்டியிருக்கும் என சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி எச்சரித்துள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பு நாடுகளின் அணிவகுப்பில் ரஷிய, பெலாரஸ் போட்டியாளா்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. மல்யுத்த போட்டியாளா்களுக்கான தேசிய முகாம், வரும் 27-ஆம் தேதி தொடங்கும் என இந்திய மல்யுத்த சம்மேளனம் அறிவித்தது.

சீனியா் மகளிா் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் மத்திய பிரதேசம் - பெங்காலையும் (4-3), ஹரியாணா - ஒடிஸாவையும் (4-1), ஜாா்க்கண்ட் - மிஸோரமையும் (2-1) வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றன.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் வீரா்கள் அணிந்துகொள்ள இருக்கும் புதிய பசுமை ஜொ்ஸியை சென்னையில் புதன்கிழமை வெளியிட்ட இந்திய வீரா் விராட் கோலி, தென்னாப்பிரிக்க வீரரும், பெங்களுரு கேப்டனுமான ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் உள்ளிட்டோா். சுற்றுச்சூழல் மற்றும் பசுமை பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியினா் பச்சை நிற ஜொ்ஸி அணிந்து விளையாடி வருகின்றனா்.