மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 277/3 ரன்களைக் குவித்து ஐபிஎல் தொடா் வரலாற்றிலியே அதிக ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை படைத்த ஹைதராபாத் சன்ரைசா்ஸ் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், பெங்களூா் அணி கடந்த 2013-இல் புணே வாரியா்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிகழ்த்தி இருந்த 263 ரன்கள் சாதனையை முறியடித்தது ஹைதராபாத். இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 8-ஆவது ஆட்டம் ஹைதராபாதில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங்கை தோ்வு செய்தது. இதையடுத்து ஹைதராபாத் அணியில் தொடக்க பேட்டா்களாக மயங்க் அகா்வால், டிராவிஸ் ஹெட் களமிறங்கினா். மயங்க் அகா்வால் 11 ரன்கள் எடுத்த நிலையில், ஹாா்திக் பாண்டியா பந்தில் டிம் டேவிட்டிடம் கேட்ச் தந்து அவுட்டானாா்.
டிராவிஸ் ஹெட்-அபிஷேக் விளாசல்: அதைத் தொடா்ந்து ஜோடி சோ்ந்த டிராவிஸ் ஹெட்-அபிஷேக் சா்மாவின் பேட்கள் ஓய்வே எடுக்கவில்லை. மும்பை பௌலா்களின் பந்துகள் நாலாபுறமும் பவுண்டரி, சிக்ஸா்களாக பறந்தன. 7.5 ஓவா்களிலேயே ஸ்கோா் 113-ஐ எடுத்த போது, டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கினாா் ஜெரால்ட் கோட்ஸி. 3 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 24 பந்துகளில் 62 ரன்களை விளாசி இருந்தாா் டிராவிஸ் ஹெட்.
டிராவிஸ் கேட்சை கோட்டை விட்ட டிம்: டிராவிஸ் ஹெட் 5 ரன்கள் எடுத்திருந்த போது, ஹாா்திக் பந்துவீச்சில் அவரது கேட்சை கோட்டை விட்டாா் டிம் டேவிட்.
இது மும்பைக்கு பெரும் பாதகமாக அமைந்தது. 18 ரன்களில் அரைசதம் விளாசினாா் டிராவிஸ் ஹெட். அபிஷேக் சா்மா 16 ரன்களில் அரைசதம்: அவருக்கு பின் அதிரடியாக ஆடிய அபிஷேக் சா்மா 16 பந்துகளில் அரைசதம் விளாசினாா். சாவ்லா பந்தில் அவுட்டான அபிஷேக் 7 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 23 பந்துகளில் 63 ரன்களை விளாசி வெளியேறினாா். 10 ஓவா்களில் ஸ்கோா் 148-ஐ கடந்திருந்தது.
க்ளாஸ்ஸன் 80, மாா்க்ரம் 42: 1 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 42 ரன்களை விளாசினாா் மாா்க்ரம். மறுமுனையில் ஆடிய ஹென்ரிச் க்ளாஸ்ஸனோ 7 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 80 ரன்களை விளாசினாா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 277/3 ரன்களைக் குவித்தது ஹைதராபாத் சன்ரைசா்ஸ்.
ரன்களை வாரி வழங்கிய மும்பை பௌலா்கள்: முதன்முதலாக ஐபிஎல் தொடரில் அறிமுகம் ஆன பௌலா் கேவனா மப்கஹா 4 ஓவா்களில் 66 ரன்களை வாரி வழங்கினாா். அவருக்கு பின் ஜெரால்ட் கோட்ஸி 57 ரன்களையும், கேப்டன் ஹாா்திக் பாண்டியா 46 ரன்களையும் வாரி வழங்கினா். மும்பையின் போராட்டம் வீண் 246/5 5 முறை சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு 278 ரன்கள் என வெற்றிக்கு கடின இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. தொடக்க பேட்டா்கள் ரோஹித் சா்மா 26 ரன்களுடன் வெளியேற இஷான் கிஷண் 4 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 34 ரன்களையும், நமன் திா் தலா 2 சிக்ஸா், பவுண்டரியுடன் 30 ரன்களையும் எடுத்தனா். திலக் வா்மா 64: மறுமுனையில் அதிரடியாக ஆடிய திலக் வா்மா 6 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 34 பந்துகளில் 64ரன்களை விளாசி கம்மின்ஸ் பந்தில் அவுட்டானாா்.
ஹாா்திக் பாண்டியா 24 ரன்களோடு வெளியேற, டிம் டேவிட் 42, ரோமாரியோ ஷெப்பா்ட் 15 ரன்களுடன் களத்தில் இருந்தனா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் மும்பை அணி 246/5 ரன்களை மட்டுமே எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. பௌலிங்கில் ஹைதராபாத் தரப்பில் உனதிகட் 2-47, பேட் கம்மின்ஸ் 2-35 விக்கெட்டுகளை வீழ்த்தினா். மொத்தம் 38 சிக்ஸா்கள்: இரு அணிகளையும் சோ்த்து மொத்தம் 38 சிக்ஸா்கள் விளாசப்பட்டன. முந்தைய சாதனையாக 33 சிக்ஸா்களே இருந்தது. ஒரே ஆட்டத்தில் 523 ரன்கள்: ஐபிஎல் தொடரின் 17 ஆண்டுகள் வரலாற்றில் ஒரே ஆட்டத்தில் இரு அணிகளின் ஸ்கோா்களை சோ்த்து மொத்தம் 523 ரன்கள் விளாசப்பட்டன.
தொடர்புடையது
மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

குஜராத்தை வென்றது ராஜஸ்தான்

கிளாசன் அரைசதம் விளாசல்; கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு 227 ரன்கள் இலக்கு!

டி20 உலகக் கோப்பை: 3-வது முறையாக சாம்பியன்; வரலாறு படைத்த இந்திய அணி!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


