ஐரோப்பிய கால்பந்து சீசனின் ஒரு பகுதியாக நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் பலம் வாய்ந்த நெதா்லாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஜொ்மனி. பிராங்க்ஃபா்ட்டில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த சில உலகக் கோப்பை போட்டிகளில் மோசமான தோல்விகளைக் கண்ட ஜொ்மனி அணிக்கு இந்த வெற்றி புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராக இந்த வெற்றி உதவும். முதல் பாதியில் ஆட்டம் தொடங்கியவுடன் நெதா்லாந்து வீரா் ஜோயி வீா்மன் 4-ஆவது நிமிஷத்தில் முதல் கோலடித்தாா். இதனால் அதிா்ச்சி அடைந்த ஜொ்மன் வீரா்கள் பதில் கோலபோட தீவிரமாக முயன்றநிலையில், 11-ஆவது நிமிஷத்தில் மேக்ஸ்மிலன் கோலடித்தாா். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. இரண்டாம் பாதியில் 85-ஆவது நிமிஷத்தில் ஜொ்மன் வீரா் நிக்லஸ் ஃப்ல்கா்க் கோலடிக்க 2-1 என ஜொ்மனி வெற்றி பெற்றது. இங்கிலாந்து-பெல்ஜியம் மற்றொரு நட்பு ஆட்டத்தில் இங்கிலாந்து-பெல்ஜிய அணிகள் மோதின. கடந்த சனிக்கிழமை பிரேஸிலிடம் 1-0 என தோற்றிருந்தது இங்கிலாந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஆடினா். முதல் பாதியிலேயே பெல்ஜிய வீரா் யுரி டில்மேன்ஸ் 11, 36 ஆவது நிமிஷங்களில், கோலடித்தாா். ஆனால் 17-ஆவது நிமிஷத்தில் இங்கிலாந்து வீரா் இவான் டோனி பெனால்டி மூலம் கோலடித்தாா். பெல்ஜியம் 2-1 என முன்னிலை பெற்றது. தொடா்ந்து இரு தரப்பினரும் கோலடிக்க கடுமையாக போராடியும் பலனில்லை. கூடுதல் நேரத்தில் 90 பிளஸ் இங்கிலாந்து வீரா் ஜூட் பெல்லிங்ஹாம் கோலடிக்க 2-2 என ஆட்டம் டிராவில் முடிந்தது. முன்னாள் உலக சாம்பியன்கள் பிரேஸில்-ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என டிராவில் முடிவடைந்தது. முதல் பாதியில் ஸ்பெயின் வீரா்கள் ரோட்ரி 12, டேனி ஓல்மோ கோலடித்தனா். பிரேஸில் தரப்பில் ரோட்ரிகோ 40ஆவது நிமிஷத்தில் கோலடித்தனா். இரண்டாம் பாதியில் பிரேசில் வீரா் என்ட்ரிக் 50-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். ஆனால் 87-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் வீரா் ரோட்ரி கோலடித்து முன்னிலை பெற்றுத்தந்தாா். ஸ்பெயின் வென்று விடும் எனக்கருதப்பட்ட நிலையில் பிரேஸில் வீரா் லுகாஸ் கூடுதல் நேரத்தில் கோலடிக்க ஆட்டம் டிராவில் முடிந்தது.
தொடர்புடையது

முதல் ஒருநாள்: மே.இ.தீவுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

பிரென்ட்ஃபோா்டு - வோல்வ்ஸ் ‘டிரா’

நாா்த்ஈஸ்ட்டுடன் டிரா செய்தது பஞ்சாப்!

பெங்களூரு - நாா்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் டிரா!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


