காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு! மதுரை நகைக்கடை திருட்டு! இருவர் கைது! திருடனை அடையாளம் கண்டது எப்படி?விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்: டிடிவி தினகரன் விமர்சனம் மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? இந்தத் தவறை மட்டும் செய்ய வேண்டாம்!மைக்ரோசாஃப்ட் சேவைகள் மீண்டன! இணையவழி தாக்குதல்கள் ஏதும் இல்லை!மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (மே 3) வெளியிட்டுள்ளது.

படம் | ஐசிசி

Updated On :

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (மே 3) வெளியிட்டுள்ளது.

ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசையில் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான அணிகளுக்கான (ஒருநாள் மற்றும் டி20) தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. டெஸ்ட் போட்டிக்கான அணியை பொறுத்தவரையில், இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 120 புள்ளிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்திலும், 105 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி 3-வது இடத்திலும் உள்ளது.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை இழந்தபோதிலும், ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

ஒருநாள் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் இந்தியா (122 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (116 புள்ளிகள்) மற்றும் தென்னாப்பிரிக்கா (112 புள்ளிகள்) அணிகள் உள்ளனர்.

டி20 தரவரிசையில் முதல் மூன்று இடங்களில் இந்தியா (264 புள்ளிகள்), ஆஸ்திரேலியா (257 புள்ளிகள்) மற்றும் இங்கிலாந்து (252 புள்ளிகள்) அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.