ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை வங்கதேசம் கைப்பற்றியுள்ளது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!
படம் | வங்கதேச கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை வங்கதேசம் கைப்பற்றியுள்ளது.

ஜிம்பாப்வே அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், இன்று மூன்றாவது டி20 போட்டி சட்டோகிராமில் நடைபெற்றது.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!
ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேசம் வெற்றி பெற்ற நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு வங்கதேசம் களமிறங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் பேட் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தௌகித் ஹிரிடாய் 57 ரன்களும், ஜேக்கர் அலி 44 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் முஷாராபானி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!
டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

இதனையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், வங்கதேசம் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேசம் 3-0 என்ற நிலையில் கைப்பற்றியுள்ளது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தௌகித் ஹிரிடாய் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com