சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான மோசமான தோல்வியை தொடர்ந்து, லக்னெள அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுடன் அணியின் உரிமையாளர் காட்டமாக விவாதிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் லீக் ஆட்டத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற போட்டியில், லக்னெள அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றி இலக்கை, 10 ஓவர்களில் கடந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது சன் ரைசர்ஸ் அணி.
சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 89(30) ரன்கள், அபிஷேக் சர்மா 75(28) ரன்கள் குவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 89 ரன்கள் வித்தியாசத்தில் லக்னெள அணி படுதோல்வியை சந்தித்தது.
அடுத்தடுத்து இரு தோல்விகளால் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள லக்னெள அணியின் ரன்ரேட்டும் மோசமாக குறைந்துள்ளது.
அடுத்து வரும் இரு போட்டிகளிலும் வென்றால்தான், லக்னெள அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிலையில், நேற்றைய போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் வைத்து அனைவரின் முன்னிலையிலும் ராகுலை அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா காட்டமாக பேசியுள்ளார்.
This is just pathetic from @LucknowIPL owner
— SRI (@srikant5333) May 8, 2024
Never saw SRH management with players on the field or even closer to dressing room irrespective of so many bad seasons and still face lot of wrath for getting involved. Just look at this @klrahul leave this shit next year #SRHvsLSG pic.twitter.com/6NlAvHMCjJ
இந்த காட்சிகள் நேரலையில் வந்த நிலையில், இணையத்தில் கே.எல்.ராகுலின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.
எதுவாக இருப்பினும், ஒரு அணியின் கேப்டனை அனைவரின் முன்னிலையிலும் இவ்வாறு தரக்குறைவாக நடத்துவது நல்லதுக்கல்ல என்றும், அடுத்தாண்டு கே.எல்.ராகுல் வேறு அணிக்கு மாற வேண்டும் என்றும் ரசிகள் பதிவிட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் விலகல்?

ஆடுகளத்தில் தலைவனாக இருந்திருக்கிறேன்... பிரான்ஸ் அணியின் புதிய பயிற்சியாளர்!

இந்திய அணி தொடர்ச்சியாக டி20 தொடர்களை இழக்க இதுதான் காரணம்: ஷ்ரேயாஸ் ஐயர்

1 ரன் வித்தியாசத்தில் வெற்றி! இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்ற அயர்லாந்து!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



