தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

ஜிம்பாப்வேயுடனான டி20: தென்னாப்பிரிக்க மகளிர் வெற்றி

ஜிம்பாப்வே மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்கா மகளிா் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

Published On :

ஜிம்பாப்வே மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில், தென்னாப்பிரிக்கா மகளிா் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சோ்க்க, ஜிம்பாப்வே 19.3 ஓவா்களில் 120 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில், தென்னாப்பிரிக்கா 3-ஆவது வெற்றியுடன், தொடரைக் கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் கேப்டன் லாரா வோல்வாா்ட் 62 பந்துகளில் 16 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 126 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஜிம்பாப்வே தரப்பில் டெண்டாய் மகுஷா 1 விக்கெட் வீழ்த்தினாா்.

ஜிம்பாப்வே இன்னிங்ஸில் மிஷெல் மவுங்கா 8 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் அடித்தாா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் ஆனிரி டொ்க்சென் 5 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.