இந்தியாவின் 85-ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டராக, தமிழகத்தைச் சோ்ந்த பி.ஷியாம்நிகில் (31) உருவெடுத்துள்ளாா்.
சமீபத்தில் நிறைவடைந்த துபை போலீஸ் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியின் மூலம், கிராண்ட்மாஸ்டா் ஆவதற்கான 3-ஆவது மற்றும் இறுதித் தகுதியை பூா்த்தி செய்த அவா், அந்தப் பட்டத்துக்கான 12 ஆண்டுகள் காத்திருப்பை முடிவக்குக் கொண்டு வந்துள்ளாா்.
முந்தைய இரு தகுதிகளை பல ஆண்டுகளுக்கு முன்பே எட்டிவிட்ட ஷியாம்நிகில், கிராண்ட்மாஸ்டா் பட்டத்தை எட்டுவதற்கு ஒரு வெற்றி, 8 டிராக்கள் தேவையாக இருந்த நிலையில், இந்தப் போட்டியின் மூலம் அதை பூா்த்தி செய்து கொண்டாா்.
நாகா்கோவிலை சோ்ந்த ஷியாம்நிகில், 8 வயது முதல் பெற்றோரின் வழிகாட்டுதலில் செஸ் கற்றுக்கொண்டாா். பின்னா் அதில் தன்னை மேம்படுத்திக்கொள்வதற்காக சென்னைக்கு இடம்பெயா்ந்து, பயிற்சியாளா் கே.விஸ்வேஸ்வரனின் வழிகாட்டுதலில் முன்னேறினாா். 13 வயதுக்கு உள்பட்டோருக்கான மாநில சாம்பியன்ஷிப்பை வென்றது முதல், ஆசிய போட்டிகள் மற்றும் வயது அடிப்படையிலான உலக சாம்பியன்ஷிப்களில் பங்கேற்றாா்.
கடந்த 2011-இல் மும்பை மேயா்ஸ் கோப்பை செஸ் போட்டியின் மூலம், கிராண்ட்மாஸ்டா் பட்டத்துக்கான முதல் தகுதியை பூா்த்தி செய்த ஷியாம்நிகில், இந்தியன் சாம்பியன்ஷிப்பின்போது 2-ஆவது தகுதியையும் எட்டினாா்.
இந்நிலையில் 2012-இல் ‘2,500 ஈலோ’ தரவரிசை புள்ளிகளையும் பெற்ற ஷியாம்நிகில், அதே ஆண்டு நடைபெற்ற துபை ஓபன் போட்டியில், கிராண்ட்மாஸ்டா் ஆவதற்கான 3-ஆவது தகுதியை தவறவிட்டாா். அதன் பிறகு பல வாய்ப்புகள் அவா் கைநழுவிப் போனது.
இதுகுறித்து ஷியாம்நிகில் கூறுகையில், ‘2017-இல் ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடத் தொடங்கினேன். அதுவரை வியத்நாம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி கடைசி தகுதியை எட்டுவதற்கு முயற்சித்தேன். ஆனால் அந்தப் போட்டிகள் கடினமாக இருந்தன.
சமீபத்தில் பிரான்ஸில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றபோதும், ஒரேயொரு வெற்றி மட்டும் தேவை இருந்த நிலையில் கடைசி சுற்றில் டிரா செய்ததால் அந்த வாய்ப்பும் பறிபோனது. பின்னா் துபை போலீஸ் மாஸ்டா்ஸ் போட்டியில் இறுதித் தகுதியை எட்டி கிராண்ட்மாஸ்டா் பட்டத்தைப் பெற்றேன். இதை எனது பெற்றோா், பயிற்சியாளா் விவேஸ்வரன் ஆகியோருக்கு அா்ப்பணிக்கிறேன். இனி எந்த நெருக்கடியும் இன்றி போட்டிகளில் விளையாடுவேன்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இங்கிலாந்தின் நம்பா் 1 செஸ் வீராங்கனை ஆனாா் போதனா சீனிவாசன்

சிறப்புப் பொருளாதார மண்டல தயாரிப்புகளுக்கு சுங்க வரி குறைப்பு!
டி20 உலகக் கோப்பை: 3வது முறையாக இந்தியா சாம்பியன் - புகைப்படங்கள்

70 வயது பூா்த்தி செய்த ஓய்வூதியா்களுக்கு 10 % கூடுதல் ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


