டி20 தொடரை வெல்லப்போவது யார்?
அயர்லாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.


அயர்லாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (மே 14) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அயர்லாந்து முதலில் பேட் செய்து வருகிறது. அந்த அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 64 ரன்கள் எடுத்திருந்தது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்போடு இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...