வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

பிரபல நேபாள கிரிக்கெட்டர் சந்தீப் லாமிச்சானேவுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
சந்தீப் லாமிச்சானே- படம்: எக்ஸ் / சந்தீப் லாமிச்சானே
Updated On :15 மே 2024, 12:41 pm

DIN

நேபாளம் நாட்டின் சுழல்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சானே. 2018இல் ஐபிஎல் போட்டியில் தேர்வான முதல் நேபாளம் கிரிக்கெட் வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தில்லி அணிக்கு தேர்வான லாமிச்சானே சிறப்பாக பந்து வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ஐபிஎல் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிபிஎல், பாகிஸ்தானின் பிஎஸ்எல் ஆகிய தொடர்களிலும் பங்கேற்று சிறப்பான பங்களிப்பினை செய்துள்ளார்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்டில் 17வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 23 வயது சந்தீப் லாமிச்சானே மீது வழக்கு பதியப்பட்டது. விசாரணைக்குப் பிறகு கடந்தாண்டு நவம்பர் 4-ஆம் தேதி காத்மாண்டு நீதிமன்றம் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

பின்னர் இந்தாண்டின் துவக்கத்தில் ஜனவரி 12-இல் 2 இலட்சம் ரூபாய்க்கு பிராமண பத்திரம் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார் லாமிச்சானே. பின்னர் நேபாள நாட்டுக்காக விளையாடியும் வருகிறார்.

இந்நிலையில் சந்தீப் லாமிச்சானே மீது குற்றம் இல்லை; அவர் நிரபராதி எனவும் 8 ஆண்டுகள் தண்டனை ரத்து எனவும் காத்மண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நேபாள அணி டி20 உலகக் கோப்பை அணியை வெளியிட்டது. இதில் சந்தீப் லமிச்சேனே இடம்பெறவில்லை. தற்போது லாமிச்சானே நேபாள அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது. மே. 25ஆம் தேதி வரை டி20 உலகக் கோப்பை அணியில் மாற்றத்தை செய்யலாம் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.