ஐபிஎல் தொடருக்குப் பின் எம்.எஸ்.தோனியின் 7 நிமிட விடியோ!

உடலை உறுதியாக வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து கடினமாக உழைப்பதைத் தவிர வேறு தெரிவு எதுவும் இல்லையென மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
எம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி

உடலை உறுதியாக வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து கடினமாக உழைப்பதைத் தவிர வேறு தெரிவு எதுவும் இல்லையென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கேப்டன் பதவியிலிருந்து விலகிய மகேந்திர சிங் தோனி, ஒரு வீரராக அணியில் விளையாடினார். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் களமிறங்கியபோதிலும், தனது அதிரடியான ஆட்டத்தால் அவர் தாக்கத்தை ஏற்படுத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய அவர் 161 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 220.55 ஆகும்.

எம்.எஸ்.தோனி
ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

இந்த நிலையில், உடலை உறுதியாக வைத்துக் கொள்வதற்கு தொடர்ந்து கடினமாக உழைப்பதைத் தவிர வேறு தெரிவு எதுவும் இல்லையென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

துபை ஐ 103.8 என்ற யூடியூப் சேனலில் இது தொடர்பாக எம்.எஸ்.தோனி பேசியதாவது: கடிமனான விஷயம் என்னவென்றால், நான் ஆண்டுமுழுவதும் கிரிக்கெட் விளையாடவில்லை. அதனால், நான் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டியிருந்தது. நான் அணியுடன் இணையும்போது, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் இளம் வீரர்களுக்கு இணையாக உடல்தகுதி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிந்தது. தொழில்முறை கிரிக்கெட்டராக இருப்பது அவ்வளவு எளிது கிடையாது. உங்களது வயதினை யாரும் குறைத்து கொடுக்கப் போவதில்லை. நீங்கள் அணியில் விளையாட வேண்டுமென்றால், மற்ற வீரர்களைப் போல உடல் உறுதியுடன் இருக்க வேண்டும். உணவுப்பழக்கம், பயிற்சி ஆகியவையும் முக்கியம்.

எம்.எஸ்.தோனி (கோப்புப்படம்)
எம்.எஸ்.தோனி (கோப்புப்படம்)படம் | ஐபிஎல்

சமூகவலைத்தளங்களில் நான் இல்லை. அதனால், எனக்கு கவனச் சிதறல் என்பது பெரிதும் கிடையாது. சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தபோது, எனது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட வேண்டும் என நினைத்தேன். எனக்கு விவசாயம் பிடிக்கும். மோட்டர் பைக்குகள் மற்றும் சில நாள்களாக பழைய கார்கள் ஆகியவை மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த மாதிரியான விஷயங்கள் மன அழுத்ததைக் குறைக்கின்றன. அழுத்தமாக இருப்பதாக உணரும்போது, எனது கார் கேரஜில் சில மணி நேரம் செலவிடுவேன். அதற்கு பிறகு நான் சரியாகி விடுவேன்.

எம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி வெறும் பெயரல்ல... ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட சிறப்பு விடியோ!

செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நாய்கள் அல்லது பூனைகள் எதுவாக இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். நான் ஏற்கனவே பழைய நேர்காணலில் இதனைக் கூறியுள்ளேன். செல்லப் பிராணிகள் எந்த ஒரு நிபந்தனையுமற்ற அன்பை உங்கள் மீது செலுத்தும். நான் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் என்னை எப்போதும் எனது செல்லப் பிராணிகள் ஒரே மாதிரியாகத்தான் வரவேற்கும்.

எம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி படம் | ஐபிஎல்

நீங்கள் ஒருவரிடம் மரியாதையை கேட்டுப்பெற முடியாது. நீங்கள் உங்களுக்கான மரியாதையை சம்பாதிக்க வேண்டும். மதிக்கத்தக்க இடத்தில் நான் இருக்கும்போது, என்னுடைய பதவிக்கு மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆனால், ஒரு தனிநபராக நான் அந்த இருக்கையில் அமர்ந்து எனக்கான மரியாதையை சம்பாதிக்க வேண்டும். எனக்கு மரியாதை கொடுங்கள் எனக் கூற முடியாது.

எம்.எஸ்.தோனி
ஐபிஎல் எலிமினேட்டர்: ஆர்சிபியா? ராஜஸ்தான் ராயல்ஸா? ஓர் அலசல்!

மக்கள் தொழில்முறை சார்ந்திருப்பது குறித்து பேசுகிறார்கள். இந்தியர்களான நாங்கள் தொழில்முறை சார்ந்து செயல்படுவோம். ஆனால், உணர்ச்சிவசமாக நாங்கள் அதனைக் காட்டிலும் வலிமையாக பிணைக்கப்பட்டுள்ளோம். ஒரு இந்தியனாக உணர்ச்சிவசமாக பிணைக்கப்பட்டிருப்பதை எனது பலமாக பார்க்கிறேன். சிஎஸ்கே உடனான எனது தொடர்பு உணர்ச்சிவசமானது. ஏதோ இரண்டு மாதங்கள் வந்து விளையாடிவிட்டு போவது போன்ற பிணைப்பு கிடையாது.

எம்.எஸ்.தோனி
எம்.எஸ்.தோனி படம் | ஐபிஎல்

சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக நான் எக்ஸ் வலைத்தளத்தைக் காட்டிலும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தெரிவு செய்கிறேன். ட்விட்டரில் நல்ல விஷயங்கள் எதுவும் நடப்பதாக நான் நம்பவில்லை. உங்களுக்கேத் தெரியும், இந்தியாவில் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை. நான் ஏன் அதில் இடம்பெற வேண்டும்? வெறும் 140 சொற்களைக் கொண்டு மட்டுமே அதில் பதிவிட முடிவும். நமது கருத்துகளை விளக்கமாக கூறமுடியாது. நான் ஒரு விஷயத்தை பதிவிட்டு சென்றால், அதனைப் படிக்கும் மக்கள் அவர்களுக்கு ஏற்றவாறு அதற்கு அர்த்தம் கொடுத்துக் கொள்வார்கள். அதனால், ட்விட்டர் எனக்கான இடம் கிடையாது.

எம்.எஸ்.தோனி
இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபில் தொடர் எளிய வழியா? கௌதம் கம்பீர் பதில்!

இன்ஸ்டாகிராமை நான் விரும்புகிறேன். அதில் எனது புகைப்படத்தையோ அல்லது விடியோவையோ பதிவிட்டுவிட்டு சென்று விடுகிறேன். இன்ஸ்டாகிராமும் தற்போது மாறிவருகிறது. இருந்தும், நான் இன்ஸ்டாகிராமை தெரிவு செய்வதற்கு காரணம் இருக்கிறது. எனது ரசிகர்கள் நான் என்ன செய்கிறேன் எனவும், நன்றாக இருக்கிறேன் எனவும் தெரிந்து கொள்ள அவர்களுடன் என்னை இணைப்பதற்காக இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகிறேன். ஆனால், இன்ஸ்டாகிராமிலும் நான் மிகுந்த ஆக்டிவாக இருக்கும் ஆள் கிடையாது. ஏனென்றால், கவனச் சிதறல்கள் குறைவாக இருப்பது மிகவும் நல்லது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com