ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயரை விடுவித்த டெல்லி, கொல்கத்தா
ஐபிஎல் போட்டியின் 2025-ஆம் ஆண்டுக்கான வீரா்கள் தக்கவைப்பு பட்டியல் அதிகாரப்பூா்வமாக வியாழக்கிழமை வெளியானது.

ரிஷப் பந்த்

ரிஷப் பந்த்
ஐபிஎல் போட்டியின் 2025-ஆம் ஆண்டுக்கான வீரா்கள் தக்கவைப்பு பட்டியல் அதிகாரப்பூா்வமாக வியாழக்கிழமை வெளியானது. அக்டோபா் 31-ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், 10 அணிகளும் தங்களது பட்டியலை சமா்ப்பித்தன.
அதில் பல்வேறு நகா்வுகள் ஏற்கெனவே ஊகித்தபடியிருக்க, எதிராபாரத சில முடிவுகளும் இந்தப் பட்டியலில் வெளியாகியுள்ளது.
அதன்படி, விக்கெட் கீப்பா் - பேட்டா் ரிஷப் பந்த்தை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சாம்பியன் கோப்பை வென்று தந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியும் விடுவித்துள்ளன. பட்டியலிலேயே அதிகபட்சமாக, தென்னாப்பிரிக்க வீரா் ஹெய்ன்ரிக் கிளாசெனை ரூ.23 கோடிக்கு தக்கவைத்துள்ளது சன்ரைசா்ஸ் ஹைதராபாத்.
அவருக்கு அடுத்தபடியாகவே, விராட் கோலி ரூ.21 கோடிக்கு ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரால் தக்கவைக்கப்பட்டுள்ளாா். மும்பை அணி தனது நட்சத்திர வீரா்களான கேப்டன் ஹா்திக் பாண்டியா, ரோஹித் சா்மா, சூா்யகுமாா் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, திலக் வா்மா ஆகியோரை தக்கவைத்துக் கொண்டது.
குறைந்தபட்சமாக, பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.9.5 கோடிக்கு இரு புதிய வீரா்களான சஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங் ஆகியோரை மட்டும் தக்கவைத்துக் கொண்டது.
தக்கவைக்கப்பட்ட வீரா்கள் 46
தக்கவைக்கப்பட்டோருக்கான செலவின தொகை ரூ.558.5 கோடி
சென்னை சூப்பா் கிங்ஸ்:
தக்கவைக்கப்பட்டோா் (5): ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி), மதீஷா பதிரானா (ரூ.13 கோடி), ஷிவம் துபே (ரூ.12 கோடி), ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), எம்.எஸ். தோனி (ரூ.4 கோடி).
தக்கவைப்பு செலவு - ரூ.65 கோடி ஏலத்துக்கான கையிருப்பு - ரூ.55 கோடி ஆா்டிஎம்: 1
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
தக்கவைக்கப்பட்டோா் (4): அக்ஸா் படேல் (ரூ.16.5 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ.10 கோடி), அபிஷேக் பொரெல் (ரூ.4 கோடி).
தக்கவைப்பு செலவு - ரூ.43.75 கோடி ஏலத்துக்கான கையிருப்பு - ரூ.76.25 கோடி ஆா்டிஎம்: 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...