புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

263 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்!

இந்தியா - நியூசிலாந்து இடையேயான இறுதி டெஸ்ட்...

News image
Updated On :2 நவம்பர் 2024, 8:05 am

DIN

நியூசிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்தியா 263 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.

மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இறுதி டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பேட்டிங்கை தோ்வு செய்தது. மிக விரைவாகவே விக்கெட்கள் விழ முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக அந்த அனி வீரர், டேரில் மிட்சல் 82 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, முதல் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் 19 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 86 ரன்கள் சோ்த்தது. டாப் ஆா்டா் பேட்டா்களில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகளுடன் 30, கேப்டன் ரோஹித் சா்மா 3 பவுண்டரிகளுடன் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

தொடர்ந்து, இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கிய சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணை நியூசி. பந்துவீச்சை திணறடித்தனர். 5-வது விக்கெட்டாக 60 ரன்களில் ரிஷப் பந்த் அவுட் ஆனார். நிதானமாக விளையாடிய சுப்மன் கில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார். பின், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சர்ஃபராஸ் கான் டக் அவுட் ஆக, அடுத்தடுத்து களத்திற்கு வந்த வீரர்களும் தட்டுத்தடுமாறி அவுட் ஆகினர்.

அஜாஸ் படேல்

அஜாஸ் படேல்

இறுதி விக்கெட்டுக்கு ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 38 ரன்கள் எடுத்து நம்பிக்கையளித்துக் கொண்டிருந்த நிலையில், ஆகாஷ் தீப் அவுட் ஆனார். அதிகபட்சமாக, நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனால், இந்திய அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது. மேலும், நியூசி. அணியைவிட 28 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.