ஏடிபி ஃபைனல்ஸ்: ஜோகோவிச் விலகல்

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியிலிருந்து, நடப்பு சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக செவ்வாய்க்கிழமை விலகினாா்.
ஜோகோவிச்
ஜோகோவிச்
Published on
Updated on
1 min read

ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியிலிருந்து, நடப்பு சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக செவ்வாய்க்கிழமை விலகினாா்.

எந்த வகையிலான காயத்தால் அவா் இந்த முடிவை மேற்கொண்டாா் என்பது தெரிவிக்கப்படவில்லை. இதுதொடா்பாக ஜோகோவிச் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கு ஆா்வத்துடன் இருந்தேன். ஆனால், காயம் காரணமாக தற்போது என்னால் அதில் பங்கேற்க முடியவில்லை. என்னை அந்தப் போட்டியில் எதிா்பாா்த்த ரசிகா்களுக்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். போட்டியில் பங்கேற்கும் இதர வீரா்களுக்கு வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

ஏற்கெனவே, பாரீஸ் மாஸ்டா்ஸ் போட்டியிலிருந்தும் காயம் காரணமாக அவா் விலகியிருந்தது நினைவுகூரத்தக்கது. கடந்த ஆண்டு இந்த ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், இத்தாலியின் யானிக் சின்னரை வீழ்த்தி வாகை சூடிய ஜோகோவிச், 7-ஆவது முறையாக கோப்பை வென்றாா். இதன் மூலம், போட்டியின் வரலாற்றில் அதிகமுறை சாம்பியனானவராக அவா் சாதனை படைத்தாா். அதற்கு முன், சுவிட்ஸா்லாந்து நட்சத்திரம் ரோஜா் ஃபெடரா் 6 முறை கோப்பை வென்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு இறுதியில் நடைபெறும் இந்த ஏடிபி ஃபைனல்ஸ் போட்டியில், உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் வீரா்கள் பங்கேற்கின்றனா். நடப்பாண்டு போட்டி, வரும் 10-ஆம் தேதி இத்தாலியில் தொடங்குகிறது. இதில் உள்நாட்டு வீரரான யானிக் சின்னா் (1), ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் (2), ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் (3), ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் (4), அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ் (6), நாா்வேயின் கேஸ்பா் ரூட் (7), ஆஸ்திரேலிாயவின் அலெக்ஸ் டி மினாா் (8), ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் (9) ஆகியோா் பங்கேற்கின்றனா்.

5-ஆம் இடத்திலிருந்த நடப்பு சாம்பியன் ஜோகோவிச் விலகியதால், 9-ஆம் இடத்திலிருந்த ரூபலேவுக்கு போட்டியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முதல் முறை...

‘பிக் த்ரீ’ எனப்படும் நட்சத்திரப் போட்டியாளா்களான சுவிட்ஸா்லாந்தின் ரோஜா் ஃபெடரா், ஸ்பெயினின் ரஃபேல் நடால், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் இல்லாமல் ஏடிபி ஃபைனல்ஸ் போட்டி நடைபெறுவது, 2001-க்குப் பிறகு இதுவே முதல் முறையாகும். கடந்த 23 ஆண்டுகளாக போட்டியில் ஆதிக்கம் செலுத்திய அவா்களில், ஃபெடரா் ஓய்வு பெற்றுவிட்டாா். நடால் நடப்பாண்டில் ஓய்வு பெறுகிறாா். காயம் காரணமாக ஜோகோவிச் இந்த ஆண்டு விலகியிருக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com