ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வெற்றியுடன் தொடங்கியது இந்தியா!

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.

News image
போட்டி தொடக்க நிகழ்வில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் அணிகளின் கேப்டன்கள்- X | Nitish Kumar
Updated On :11 நவம்பர் 2024, 11:38 pm

DIN

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 4-0 கோல் கணக்கில் மலேசியாவை திங்கள்கிழமை வீழ்த்தியது.

மகளிருக்கான 8-ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, பிகார் மாநிலம் ராஜ்கிரில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் நடைபெற்ற 3 ஆட்டங்களில் கடைசியாக, இந்தியா - மலேசியா அணிகள் மோதின. நடப்பு சாம்பியனான இந்தியா, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது.

இந்தியாவின் தாக்குதல் ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாத மலேசியாவால், இறுதிவரை கோலடிக்க முடியாமல் போனது. இந்திய தரப்பில் சங்கீதா குமாரி 8-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினார். அதன்பிறகு மலேசியா தடுப்பாட்டம் விளையாட, முதல் பாதியை 1 – 0 முன்னிலையுடனே இந்தியா நிறைவு செய்தது.

2-ஆவது பாதியில் இந்தியா மீண்டும் ஆக்ரோஷம் காட்ட மலேசியா பின்வாங்கியது. 43-ஆவது நிமிஷத்தில் பிரீத்தி துபேவும், 44-ஆவது நிமிஷத்தில் உதிதாவும் ஸ்கோர் செய்தனர்.

இதனால் இந்தியாவின் முன்னிலை 3 - 0 என அதிகரித்தது. ஆட்டம் ஒரு பக்கமாகவே சென்று விட்ட நிலையில், 55-ஆவது நிமிஷத்தில் சங்கீதா குமாரி மீண்டும் ஒரு கோலடித்தார். இதனால் இந்தியா 4 - 0 கோல் கணக்கில் வெற்றியுடன் ஆட்டத்தை நிறைவு செய்தது.

இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் தென்கொரியாவை செவ்வாய்க்கிழமை (நவ. 12) சந்திக்கிறது. அதே நாளில், தாய்லாந்து ஜப்பானையும், சீனா - மலேசியாவையும் எதிர்கொள்கின்றன.

இதர ஆட்டங்கள்: இதனிடையே, திங்கள்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜப்பான் - தென்கொரியா அணிகள் மோத, அந்த ஆட்டம் 2-2 கோல் கணக்கில் டிரா ஆனது. அடுத்த ஆட்டத்தில் சீனா 15 - 0 கோல் கணக்கில் தாய்லாந்தை புரட்டி எடுத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.