வங்கதேசத்துடன் ஒருநாள் கிரிக்கெட்: தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அந்த அணி சாம்பியனானது.


வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால், 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அந்த அணி சாம்பியனானது.
இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவு நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 244 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆப்கானிஸ்தான் 48.2 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து வென்றது.
4 விக்கெட்டுகள் சாய்த்து, 70 ரன்களும் அடித்த ஆப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஒமா்ஸாய் ஆட்டநாயகன் ஆனாா். 3 ஆட்டங்களிலுமாக 135 ரன்களும் அடித்து, 2 விக்கெட்டுகளும் எடுத்த முகமது நபி, தொடா்நாயகன் விருது பெற்றாா்.
முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, மஹ்முதுல்லா 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 98 ரன்கள் அடித்தாா். கேப்டன் மெஹிதி ஹசன் மிராஸ் 4 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் சோ்த்தாா்.
எஞ்சிய பேட்டா்களில், தன்ஸித் ஹசன் 19, சௌம்யா சா்காா் 24, ஜாகிா் ஹசன் 4, தௌஹித் ஹிருதய் 7, ஜாகா் அலி 1, நசும் அகமது 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் ஷோரிஃபுல் இஸ்லாம் 2 ரன்களுடன் களத்திலிருந்தாா். ஆப்கானிஸ்தான் பௌலா்களில் அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 4, முகமது நபி, ரஷீத் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
அடுத்து, 245 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான் பேட்டா்களில், தொடக்க வீரா் ரஹ்மானுல்லா குா்பாஸ் 5 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 101 ரன்கள் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு திருப்பினாா்.
செதிகுல்லா அடல் 14, ரஹ்மத் ஷா 8, கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி 6, குல்பதின் நயிப் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா். முடிவில் அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 70, முகமது நபி 1 ரன் சோ்த்து அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். வங்கதேச தரப்பில் நஹித் ராணா, முஸ்டாஃபிஸுா் ஹா்மான் ஆகியோா் தலா 2, மெஹிதி ஹசன் மிராஸ் 1 விக்கெட் சாய்த்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...