மத்திய அரசால் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட வரைவு தேசிய விளையாட்டு மசோதா, இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய பாராலிம்பிக் கமிட்டி, அனைத்து தேசிய சம்மேளனங்கள் ஆகியவற்றில் 30 சதவீத மகளிர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
நுழைவு இசைவுக்கான ஆவணங்கள் நடைமுறையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, தில்லியில் இம்மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான பிரிட்டனின் நேதன் ஹேல் உள்ளிட்ட முக்கிய போட்டியாளர்கள் சிலர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான 2}ஆவது டெஸ்ட் செவ்வாய்க்கிழமை தொடங்கும் நிலையில், காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் விளையாடாத இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அந்த ஆட்டத்தில் களம் காண்கிறார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில், ஷான் அப்பாட், கூப்பர் கானலி, ஜேக் ஃபிரேசர் மெக்கர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேஸில்வுட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸôம்பா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட இந்தியர்கள் பங்கேற்கும் டென்மார்க் ஓபன் பாட்மின்டன் போட்டி, செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
ஹாக்கி இந்தியா லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில், அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ரூ.78 லட்சத்துக்கு சூர்மா ஹாக்கி கிளப்பால் வாங்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள்: சில வரிகளில்...

எனது கேப்டன்சி பயணத்தில் கடைசி 3 மாதங்கள் மிகவும் கடினமானவை: பென் ஸ்டோக்ஸ்
விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


