மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

News image
Updated On :15 மார்ச் 2026, 10:00 pm

தினமணி செய்திச் சேவை

பிரபலமான நியூயார்க் சிட்டி அரை மாரத்தான் போட்டியில் இந்தியாவின் குல்வீர் சிங் 3-ஆம் இடம்பிடித்து அசத்தினார்.

அமெரிக்காவில் நடைபெற்ற என்சிஏஏ இண்டோர் சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண் டுதலில் இந்தியாவின் செல்வ பிரபு 17.05 மீட்டருடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம், தொடரை 2-1 என்ற வகையில் கைப்பற்றியது.

பாகிஸ்தான் முன்னாள் கேப்ட னும், விக்கெட் கீப்பர் பேட்ட குமான சர்ஃப்ராஸ் அகமது (38), அனைத்து விதமான கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஞாயிற்றுக் கிழமை அறிவித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 54 டெஸ்ட், 117 ஒருநாள். 61டி20 ஆட்டங்களில் விளையா டியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் - அவரின் நீண்ட நாள் தோழி வன்ஷிகா சிங்கின் திருமணம் ஞாயிற்றுக்கிழமை முசுறியில் நடைபெற்றது.

ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஈரான் கால்பந்து வீராங்கனைகள் 6 பேரில் மூவர், தங்களின் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் ஈரான் செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.