நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கிரெஜ்சிகோவா, மாயா முன்னேற்றம்

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:01 pm

Din

சீனாவில் நடைபெறும் நிங்போ ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில் செக் குடியரசின் பாா்பரா கிரெஜ்சிகோவா, பிரேஸிலின் பீட்ரிஸ் ஹட்டட் மாயா ஆகியோா் காலிறுதிக்கு தகுதிபெற்றனா்.

மகளிா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கிரெஜ்சிகோவா 7-6 (7/5), 6-3 என்ற நோ் செட்களில் சீனாவின் யெஸின் மாவை வெளியேற்றினாா். 6-ஆம் இடத்திலிருக்கும் மாயா 7-6 (7/2), 7/5 என்ற கணக்கில் பிரிட்டனின் கேட்டி போல்டரை தோற்கடித்தாா்.

7-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் அனா கலின்ஸ்கயா 6-3, 6-3 என, சீனாவின் யு யுவானை எளிதாகச் சாய்த்தாா். செக் குடியரசின் கரோலின் முசோவா 6-2, 6-1 என்ற செட்களில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனை வீழ்த்தினாா்.