தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

வரலாற்று சாதனையை நிகழ்த்தினார் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி..!

இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 2,800 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

News image
அர்ஜுன் எரிகைசி- படம்: எக்ஸ் / விஸ்வநாதன் ஆனந்த்.
Updated On :25 அக்டோபர் 2024, 6:53 am

DIN

இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி ஃபிடே லைவ் ரேட்டிங்கில் 2,800 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை நிகழ்த்தும் 2ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை உலக அளவில் 15 பேர் மட்டுமே இந்தப் புள்ளிகளை கடந்திருந்தார்கள். தற்போது, 16ஆவது வீரராக அர்ஜுன் எரிகைசி இணைந்துள்ளார். இதற்கு தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செஸ் தரவரிசையில் 3ஆவது இடம்

இதன்மூலம் உலக செஸ் தரவரிசையில் 3ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளார். முதலிடத்தில் மாக்னஸ் கார்ல்சன் 2,831 புள்ளிகளுடன் இருக்கிறார். 2ஆம் இடத்தில் ஃபபியானோ கருணா 2,805.2 புள்ளிகளுடன் இருக்கிறார்.

கடந்த வாரம் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்றாலும் இந்த சாதனையை நிகழ்த்த முடியவில்லை. கிளாசிக்கல் கேமில் டிரா ஆனதால் தவறவிட்டார்.

45ஆவது செஸ் ஒலிம்பியாட்டில் அர்ஜுன் எரிகைசி முதல் 6 போட்டிகளில் 6-0 என வென்றதால் இந்தியா முதலிடத்தை தக்க வைக்க மிகவும் உதவியது குறிப்பிடத்தக்கது.

செஸ் உலகில் பலரும் அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.