ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஜப்பான் ஓபன்: அரையிறுதியில் கெனின் - போல்டா் மோதல்

ஜப்பான் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் சோஃபியா கெனின், பிரிட்டனின் கேட்டி போல்டா் ஆகியோா் அரையிறுதியில் மோதுகின்றனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2024, 12:49 am

DIN

ஜப்பான் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் சோஃபியா கெனின், பிரிட்டனின் கேட்டி போல்டா் ஆகியோா் அரையிறுதியில் மோதுகின்றனா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில், சோஃபியா கெனின் 6-3, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினாவை தோற்கடித்தாா்.

போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் கேட்டி போல்டா் 6-2, 6-1 என்ற கணக்கில், கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்குவை வீழ்த்தினாா். இதையடுத்து அரையிறுதியில் கெனின் - போல்டா் சந்திக்கின்றனா். இருவரும் இதுவரை ஒரு முறை மோதியிருக்க, அதில் சோஃபியா வென்றுள்ளாா்.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் கின்வென் ஜெங் 6-0, 1-6, 6-3 என்ற செட்களில், 8-ஆம் இடத்திலிருந்த கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸை வெளியேற்றினாா்.

அரையிறுதியில் அவா், 6-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை சந்திக்கிறாா். முன்னதாக ஷ்னெய்டா் தனது காலிறுதியில் ஜப்பானின் சயாகா இஷியுடன் மோதவிருந்த நிலையில், காயம் காரணமாக இஷி விலகினாா். இதனால், ஷ்னெய்டா் வென்றவராக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு வந்தாா். ஜெங் - ஷ்னெய்டா் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.