காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட ஒலிம்பிக் வீராங்கனை பரிதாபமாக உயிரிழந்தார்.
கென்யாவில் வசித்து வந்த உகாண்டா தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி அவரது காதலனால் தாக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பலத்த காயமடைந்த அவர் உடலில் 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக வியாழக்கிழமை உயிரிழந்தாக உகாண்டா தடகள கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகராறு
2024 ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டப்பந்தயத்தில் 44 வது இடத்தைப் பிடித்த வீராங்கனையான ரெபேக்கா செப்டேஜி, மேற்கு டிரான்ஸ் நஸோயா கவுண்டியில் உள்ள அவரது வீட்டில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தீவைத்து எரிக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் போது, ரெபேக்கா செப்டேஜியின் காதலன், டிக்சன் என்டிமா பெட்ரோலை வாங்கி, அவள் மீது ஊற்றி, எரித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் என்டிமாவுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன.
கவுண்டியின் பல தடகளப் பயிற்சி மையங்களுக்கு அருகில் இருக்கும் வகையில் டிரான்ஸ் நஸோயாவில் ரெபேக்கா செப்டேஜி நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். இதனால், கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுபற்றி உகாண்டா தடகள கூட்டமைப்பு எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மரணம்
அந்தப் பதிவில், “குடும்ப வன்முறையால் துரதிருஷ்டவசமாக உயிரிழந்த எங்கள் தடகள வீராங்கனை ரெபேக்கா செப்டேஜி இன்று(செப் 5) அதிகாலை மரணமடைந்ததை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த வருத்தமடைகிறோம். கூட்டமைப்பாக, இதுபோன்ற செயல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அவரது மரணத்தை குடும்பத்தினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட எல்டோரெட்டில் உள்ள மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் ஓவன் மெனாச் தடகள வீராங்கனையின் அனைத்து உறுப்புகளும் செயலிழந்ததால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீனா ஓபன்: டோக்கியோ சாம்பியனிடம் பிவி சிந்து தோல்வி!
தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே குப்பைகளை எரிப்பதால் மக்கள் அவதி
ரூ. 70 லட்சம் போதைப்பொருளுடன் உகாண்டா நாட்டுப் பெண் தில்லியில் கைது!

30.6.1976: குடும்பக் கட்டுப்பாடு: 3 குழந்தைக்கு மேலிருந்தால் சில சலுகைகள் ரத்தாகலாம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



