
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய வீரர்கள் பட்டியலை இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமை(செப். 8) அறிவித்துள்ளது.
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்),
யஜஸ்வி ஜெய்ஸ்வால்,
ஷுப்மான் கில்,
விராட் கோலி,
கே.எல். ராகுல்,
சர்பராஸ் கான்,
ரிஷப் பந்த் (விக்கெட்கீப்பர்),
துருவ் ஜூரல் (விக்கெட்கீப்பர்),
ரவிச்சந்திரன் அஸ்வின்,
ரவீந்திர ஜடேஜா,
அக்சர் படேல்,
குல்தீப் யாதவ்,
முகமது சிராஜ்,
ஆகாஷ் தீப்,
ஜஸ்பிரித் பும்ரா,
யாஷ் தயாள்.
அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வங்கதேசம் 2-0 என்ற கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.