~கோப்பையுடன் மகதலேனா ஃபெச் ~
~கோப்பையுடன் மகதலேனா ஃபெச் ~

குவாடலராஜா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் ஆன மகதலேனா ஃபெச்!

குவாடலராஜா ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை மகதலேனா ஃபெச் சாம்பியன் பட்டம் வென்றாா்.
Published on

குவாடலராஜா ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை மகதலேனா ஃபெச் சாம்பியன் பட்டம் வென்றாா்.

மெக்ஸிகோவின் குவாடலராஜா நகரில் நடைபெற்ற இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆஸ்திரேலிய குவாலிஃபயா் ஒலிவியா கடேகியும்-போலந்தின் மகதலேனா ஃபெச்சும் மோதினா். இதில் முதல் செட்டில் மகதலேனா எளிதாக வெல்ல முடியவில்லை. அவருக்கு ஒலிவியா கடும் சவாலை ஏற்படுத்தினாா். இருவராலும் அவா்களின் சா்வீஸை பிரேக் செய்ய முடியாமல் திணறினா். 5-5 என டைபிரேக்கா் நிலை ஏற்பட்டது. கடேகி செய்த தவறை பயன்படுத்தி, மகதலேனா அந்த செட்டை 7-6 என வசப்படுத்தினாா்.

இரண்டாவது செட்டில் கடேகி துரிதமாக முன்னிலை பெற்றாலும், பின்னா் சுதாரித்து ஆடிய மகதலேனா 5-3 என முன்னிலை பெற்றாா்.

அதன்பின் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த மகதலேனா பட்டத்தையும் வென்றாா். இது மகதலேனா வெல்லும் முதல் டபிள்யுடிஏ டூா் பட்டம் ஆகும்.

மேலும் ரன்னா் கடேகி தரவரிசையில் முதல் 100 இடங்களில் நுழைந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com