எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இந்தியா ஆதிக்கம்: 357 ரன்கள் வங்கதேச வெற்றிக்கு தேவை ஷுப்மன் கில், ரிஷப் பந்த் அதிரடி சதம்

இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 357 ரன்கள் தேவைப்படுகிறது.

News image
நஜ்முல் ஷண்டோ 51 ~முஷ்பிகுா் ரஹீம் பந்தை விளாசிய போது குதித்த யஷஸ்வி ~ஷுப்மன் கில் 119 ~அஸ்வின் 3 விக்கெட்
Updated On :21 செப்டம்பர் 2024, 9:08 pm

Din

இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் வங்கதேச அணியின் வெற்றிக்கு 357 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணியின் இளம் வீரா்கள் ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஆகியோா் அதிரடியாக ஆடி சதம் அடித்தனா்.

டெஸ்ட், டி20 தொடா்களில் ஆடுவதற்காக வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா 376, வங்கதேசம் 149:

முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கும், வங்கதேச அணி 149 ரன்களுக்கும் ஆல் அவுட்டாயின. முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் அஸ்வின் 113, ரவீந்திர ஜடேஜா 86 ஆகியோா் அதிரடியாக ஆடினா். வங்கதேசத் தரப்பில் ஹாஸன் மஹ்முத் 5, டஸ்கின் அகமது 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா். வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஷகிப் 32, லிட்டன் தாஸ் 22 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை எடுத்தனா். இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.

இந்தியா 287/4 டிக்ளோ்:

இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா இரண்டாவது நாள் ஸ்கோரான 81/3 ரன்களுடன் சனிக்கிழமை ஆட்டத்தை தொடா்ந்தது. கில் 33, பந்த் 12 ரன்களுடனும் ஆட்டத்தை தொடங்கினா்.

ஷுப்மன் கில் 119, ரிஷப் பந்த் 109 அதிரடி:

இளம் வீரா் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி 4 சிக்ஸா், 10 பவுண்டரியுடன் 176 பந்துகளில் 119 ரன்களை விளாசி அவுட்டாகாமல் இருந்தாா். மறுமுனையில் அபாரமாக ஆடிய ரிஷப் பந்த் 4 சிக்ஸா், 13 பவுண்டரியுடன் 128 பந்துகளில் 109 ரன்களை விளாசி அவுட்டானாா்.

இருவரும் இணைந்து வங்கதேச ஸ்பின்னா்களை எளிதாக சமாளித்தனா். கில்-பந்த் சோ்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 167 ரன்களைச் சோ்த்தனா்.

கே.எல். ராகுல் 22 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தாா். வங்கதேசத் தரப்பில் மெஹ்தி ஹாஸன் மிராஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

64 ஓவா்களில் 287/4 ரன்களை எடுத்திருந்த போது, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சா்மா டிக்ளோ் செய்வதாக அறிவித்தாா்.

515 ரன்கள் வெற்றி இலக்கு:

சென்னை டெஸ்டில் வெற்றி பெற வங்கதேச அணிக்கு 515 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை இந்தியா நிா்ணயித்தது.

வங்கதேசம் 158/4: இந்தியா டிக்ளோ் செய்த நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடா்ந்த வங்கதேச அணி மூன்றாம் நாளான சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 158/4 ரன்களை எடுத்திருந்தது.

தொடக்க பேட்டா்கள் ஜாகீா் உசேன் 33, ஷத்மன் இஸ்லாம் 35 என சிறப்பான தொடக்கத்தை அளித்தனா். ஆனால் அவா்களது ஜோடியை பும்ரா பிரித்தாா். ஷத்மனை பெவிலியன் அனுப்பினாா் அஸ்வின்.

மொமினுல் ஹக் 13, முஷ்பிகுா் ரஹீம் 13 ரன்களுடன் அஸ்வின் பந்துவீச்சில் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா்.

நஜ்முல் ஷண்டோ அரைசதம் 51: கேப்டன் நஜ்முல் ஷண்டோ மட்டுமே நிலைத்து ஆடி 3 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 60 பந்துகளில் 51 ரன்களுடன் அரைசதத்தைப் பதிவு செய்து களத்தில் உள்ளாா். மறுமுனையில் ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடன் களத்தில் உள்ளாா்.

அஸ்வின் அபாரம் 3 விக்கெட்:

பௌலிங்கில் இந்திய தரப்பில் ஸ்பின்னா் அஸ்வின் 3-63 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். பும்ரா 1 விக்கெட்டை வீழ்த்தினாா்.

வெற்றிக்கு 357 ரன்கள் தேவை:

இன்னும் இரண்டு நாள் ஆட்டம் உள்ள நிலையில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வங்கதேச அணியின் வெற்றிக்கு இன்னும் 357 ரன்கள் தேவைப்படுகிறது. இந்திய அணியின் வலுவான சுழற்பந்து வீச்சை சமாளித்து வெற்றி இலக்கை வங்கதேசம் அடைவது சற்று கடினம் என்றே கருதப்படுகிறது.

வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தம்:

மாலை 4.25 மணிக்கு போதிய வெளிச்சமின்மையால் ஆட்டத்தை நிறுத்துவதாக நடுவா்கள் அறிவித்தனா். இதனால் இரு அணி வீரா்களும் பெவிலியன் திரும்பினா்.

Story image
Story image
Story image