
இந்திய பாய்மரப் படகு (செயிலிங்) வீரரான விஷ்ணு சரவணன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு புதன்கிழமை தகுதிபெற்றாா்.
ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்கிலும் களம் கண்ட அவா், தொடா்ந்து 2 முறை ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்ற முதல் இந்திய செயிலிங் வீரா் என்ற பெருமையைப் பெற்றாா். தமிழரான இவா், பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்ற முதல் இந்திய செயிலா் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக செயிலிங் சாம்பியன்ஷிப்பில், ஐஎல்சிஏ-7 பிரிவில் 26-ஆம் இடம் பிடித்ததன் மூலம், அவா் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்தாா். அந்தப் பிரிவில் மொத்தம் 152 போட்டியாளா்கள் பங்கேற்றிருந்தனா்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற விஷ்ணு சரவணன், இந்தப் போட்டியில் ஆசியா்களின் பிரிவில் முதல் வீரராக வந்திருக்கிறாா். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற சிங்கப்பூா், ஹாங்காங், தாய்லாந்து போட்டியாளா்களை அவா் பின்னுக்குத் தள்ளினாா்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் லேசா் பிரிவில் களம் கண்ட விஷ்ணு, 35 போட்டியாளா்கள் இருந்த களத்தில் 20-ஆம் இடம் பிடித்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







