இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுக்கு காயம்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுக்கு காயம்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (பிப்ரவரி 2) விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்தப் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 18-வது ஓவரில் விளையாடியபோது ஷுப்மன் கில் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது ஜோ ரூட்டுக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் ஜோ ரூட் உடனடியாக ஃபீல்டிங்கிலிருந்து வெளியேறினார்.

இது தொடர்பாக இங்கிலாந்து அணி தரப்பில் தெரிவித்திருப்பதாவது: ஜோ ரூட்டின் வலது கை சுண்டுவிரலில் அடிபட்டுள்ளது. அணியின் மருத்துவக் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதனால் அவர் ஃபீல்டிங் செய்யமாட்டார். அவர் எப்போது ஃபீல்டிங்குக்குத் திரும்புவார் என்பதை தற்போது கூற முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் ஜோ ரூட் பேட்டிங் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com