முதல் டெஸ்ட்: இருவர் சதம்; வலுவான நிலையில் நியூசிலாந்து!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
முதல் டெஸ்ட்: இருவர் சதம்; வலுவான நிலையில் நியூசிலாந்து!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும்  இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 4) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது.

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லாதம் மற்றும் டெவான் கான்வே நீண்ட நேரம் நிலைக்கவில்லை. டாம் லாதம் 20 ரன்களிலும், கான்வே ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து, கேன் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு ரன்களை சேர்த்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

கேன் வில்லியம்சன் 112 ரன்களுடனும் (15 பவுண்டரிகள்) , ரச்சின் ரவீந்திரா 118 (13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com