
மும்பை: இந்திய மகளிருக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா 3-0 என முற்றிலுமாக கைப்பற்ற, இந்தியா ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலிய பேட்டர் போப் லிட்ச்ஃபீல்டு, ஆட்டநாயகி (119 ரன்கள்), தொடர்நாயகி (260 ரன்கள்) விருது பெற்றார்.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 338 ரன்கள் சேர்க்க, பின்னர் இந்தியா 32.4 ஓவர்களில் 148 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில், தொடக்க வீராங்கனைகள் போப் லிட்ச்ஃபீல்டு - கேப்டன் அலிசா ஹீலி அசத்தலாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேர்த்தனர். ஹீலி 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 82, லிட்ச்ஃபீல்டு 16 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
எஞ்சியோரில் எலிஸ் பெரி 16, பெத் மூனி 3, டாலியா மெக்ராத் 0, ஆஷ்லே கார்டனர் 30, அனபெல் சதர்லேண்ட் 23 ரன்களுக்கு வீழ, ஓவர்கள் முடிவில் ஜார்ஜியா வேர்ஹாம் 11, அலானா கிங் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பெளலிங்கில் ஷ்ரேயங்கா பாட்டீல் 3, அமன்ஜோத் கெளர் 2, பூஜா வஸ்த்ரகர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் இந்திய இன்னிங்ஸில் ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரிகளுடன் 29, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது. யஸ்திகா பாட்டியா 6, ரிச்சா கோஷ் 19, கேப்டன் ஹர்மன்பிரீத் கெளர் 3, அமன்ஜோத் கெளர் 3, பூஜா வஸ்த்ரகர் 14, ஷ்ரேயங்கா பாட்டீல் 2, ரேணுகா சிங் 0, மன்னத் காஷ்யப் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
முடிவில் தீப்தி சர்மா 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, ஆஸ்திரேலிய பெளலிங்கில் ஜார்ஜியா வேர்ஹாம் 3, மீகன் ஸ்கட், அலானா கிங், அனபெல் ஆகியோர் தலா 2, ஆஷ்லே கார்டனர் 1 விக்கெட் வீழ்த்தினர்.
அதிகபட்சம்...
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பதிவு செய்த ஸ்கோரே (338/7) ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஒரு அணி பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோராகும். இந்தியாவுக்கு எதிரான தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது இது 9-ஆவது முறை. அதை இந்தியாவின் சொந்த மண்ணிலேயே வென்றது 5-ஆவது முறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






