டெஸ்ட் தொடரில் இடம்பெறாத புஜாரா ரஞ்சியில் சதம் விளாசி அசத்தல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெறாத புஜாரா ரஞ்சிக் கோப்பையில்  சதம் விளாசி அசத்தியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம்பெறாத புஜாரா ரஞ்சிக் கோப்பையில்  சதம் விளாசி அசத்தியுள்ளார்.

ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் நேற்று (ஜனவரி 5) முதல் தொங்கின. சௌராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (ஜனவரி 5) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஜார்க்கண்ட் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷாக்ரா 29 ரன்கள் எடுத்தார். சௌராஷ்டிரா தரப்பில் சிராக் ஜேனி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் ஜயதேவ் உனத்கட் மற்றும் ஆதித்யா ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் சௌராஷ்டிரா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 406 ரன்கள் குவித்துள்ளது. சௌராஷ்டிரா அணிக்காக விளையாடும் புஜாரா சதம் விளாசி அசத்தினார். அவர் 239 பந்துகளில் 157 ரன்கள் (19 பவுண்டரிகள்) எடுத்து களத்தில் உள்ளார். அவருடன் பிரேரக் மன்கத் 23 ரன்களுடன் களத்தில் உள்ளார். சௌராஷ்டிர அணி ஜார்க்கண்டைக் காட்டிலும் 264 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் புஜாரா இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com