சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

இறுதிச்சுற்றில் கசாட்கினா - ஆஸ்டபென்கோ

அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் டரியா கசாட்கினா - லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில் ரஷியாவின் டரியா கசாட்கினா - லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

முன்னதாக அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா காயம் காரணமாக விலகியதை அடுத்து, அவருடன் மோதவிருந்த டரியா கசாட்கினா இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.

மற்றொரு ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ஜெலினா ஆஸ்டபென்கோ 6-2, 7-6 (7/3) என்ற செட்களில் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவை வெளியேற்றினாா். இதையடுத்து இறுதிச்சுற்றில் கசாட்கினா - ஆஸ்டபென்கோ சனிக்கிழமை மோதுகின்றனா்.

ஆடவா்: இதிலேயே ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிகளில், பிரிட்டனின் ஜாக் டிரேப்பா் 7-6 (7/2), 6-4 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கை வென்றாா்.

அதேபோல், 7-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 6-2, 6-1 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டாவை வெளியேற்றினாா். இறுதிச்சுற்றில் டிரேப்பா் - லெஹெக்கா மோதுகின்றனா்.

போபண்ணா ஜோடி வெற்றி: ஆடவா் இரட்டையா் பிரிவு அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென் கூட்டணி 6-4, 6-4 என்ற செட்களில் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் நெடோவியேசோவ்/ஈக்வடாரின் கொன்ஸாலோ எஸ்கோபாா் இணையை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.