மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

காவலதிகாரியாக நடிக்க 14 கிலோ உடல் எடையைக் கூட்டிய நிமிஷா சஜயன்!

மலையாள நடிகை நிமிஷா சஜயன் தனது எடைக்குறைப்புக்கு உதவிய பயிற்சியாளர் பற்றி பகிர்ந்த பதிவு குறித்து...

Nimisha Sajayan with the trainer who helped with her weight loss.

எடைக்குறைப்புக்கு உதவிய பயிற்சியாளர் உடன் நிமிஷா சஜயன். - படங்கள்: இன்ஸ்டா / நிமிஷா சஜயன்.

Published On :

மலையாள நடிகை நிமிஷா சஜயன் பபிதா சிங் ரிப்போர்டிங் என்ற ஹிந்தி படத்துக்காக தனது உடல் எடையை 14 கிலோ உயர்த்தியதும் பின்னர் தனது எடைக்குறைப்புக்கு உதவிய பயிற்சியாளர் பற்றியும் நீண்ட பதிவில் எழுதியுள்ளார்.

தொண்டிமுதலும் த்ரிசாக்‌ஷியும் என்ற படத்தில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். தமிழில் சித்தா படத்தில் அறிமுகமாகி கவனம் பெற்றார். கடைசியாக அவர் நடிப்பில் டிஎன்ஏ என்ற தமிழ்ப் படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

ஹிந்தியில் பபிதா சிங் ரிப்போர்டிங் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஆக.28ஆம் தேதி அமேசன் பிரைம் ஓடிடியில் வெளியானது. நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தப் படத்துக்கு அமிதா வியாஸ் கதை எழுத, அம்பிகா பண்டிட் இயக்கியுள்ளார். இந்தப் படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

இந்த கதாபாத்திரத்துக்காக சுமார் 14 கிலோ (58 கிலோவில் இருந்து 72 கிலோ) உடல் எடையைக் கூட்டினேன். உண்மையில் எடைக்குறைப்பு பயணம் என்பது வேறுகதையாக இருந்தது.

முதல் 10 நாள்கள் மிகவும் கடினமாக இருந்தது. சரியான தூக்கமில்லை, மனநிலை மாற்றங்கள், களைப்பு, வெறுப்பு என பல தருணங்களில் என்னால் முடியவில்லை என்றே தோன்றியது. பலமுறை எனது பயிற்சியாளரிடம் அமர்ந்து ‘என்னால் செய்ய முடியவில்லை’ என அழுதிருக்கிறேன்.

எனது பயிற்சியாளர் அலி ஷிபாஸ் நீங்கள் மட்டுமில்லை என்றால் என்னால் இதைச் செய்திருக்கவே முடியாது. இந்தப் பயணத்தில் நீங்கள் எனது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தீர்கள். கைவிட நினைக்குபோதெல்லாம் எனக்கு உந்துதல் அளித்து உடற்பயிற்சியை நம்பவைத்தீர்கள்.

எனது மோசமான நாள்களை நீங்கள் விமர்சிக்கவில்லை; என்னை குற்றவுணர்வுக்கும் ஆளாக்கவில்லை. ஒவ்வொரு நாளும் என்னுடன் இருந்தீர்கள். வெறுப்பாகி களைப்பில் எல்லாவற்றையும் விட நினைத்திருக்கிறேன். எப்படியோ என்னை அடுத்த நாளுக்குக் கூட்டிச் செல்வீர்கள்.

இந்தப் பயணத்தில் கற்றுக்கொண்டது எடைக் குறைப்பு என்பது பொறுமையும் தொடர்ச்சியான உடற்பயிற்சியை நம்புவதும் குறிப்பாக சரியான நபர் நமது பின்னாடி இருப்பதுதான்.

என்னுடன் இருந்து எனது சவால்களை எளிதாக்கியவர் நீங்கள். எனது சிறந்த பயிற்சியாளர், எனது நலம்விரும்பி, தொடர்ச்சியாக ஊக்கம் அளிப்பவர். என்னை நானே நம்பாதபோதும் என்னை நம்பியதுக்கு நன்றி ஷிபுக்கா. நீங்கள் இல்லாமல் இதைச் செய்திருக்கவே முடியாது எனக் கூறியுள்ளார்.

Summary

Nimisha Sajayan gained 14 kg to play a police officer in Babita Singh Reporting film!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.