டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.71 ஆக நிறைவு!சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துடன் நிறைவு!!காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்புதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு! மாலை நிலவரம்! (ஆக.21) எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

நிமிஷா சஜயன் - கருணாஸின் புதிய படம்: துருக்கி திரைப்பட விழாவுக்குத் தேர்வு!

நடிகை நிமிஷா சஜயன், நடிகர் கருணாஸ் நடித்துள்ள புதிய படம் குறித்து...

Poster of the movie 'Enna Vilai'.

என்ன விலை படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / கலமாயா சினிவெர்ஸ்

Published On :21 ஆகஸ்ட் 2026, 5:37 pm IST

நடிகை நிமிஷா சஜயன், நடிகர் கருணாஸ் நடித்துள்ள புதிய படம் துருக்கி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

கலமாயா சினிவெர்ஸ், ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் ‘என்ன விலை’ என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் நடிகை நிமிஷா சஜயன், நடிகர் கருணாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சிறுவர், சிறுமிகளும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

கேரளத்தைச் சேர்ந்த திரைக்கதை ஆசிரியர் சஜீவ் பழூர் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகுகிறார். இவரது தொண்டி முதலும் திருக்ஷாக்ஷியும் படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

சஜீவ் பழூர் தனது அறிமுக படமான என்ன விலை படத்தை ஏற்கெனவே பல திரைப்பட விழாவிற்கு அனுப்பியுள்ளார். அதில் நான்கில் விருதுகள் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, துருக்கியில் இஸ்தான்புல் நகரில் நடைபெறும் கையா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்தப் படம் செப்டம்பரில் பான் இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் சிறந்த நடிகையாகக் கருதப்படும் நிமிஷா சஜயன் நடிப்பில் கடைசியாக தமிழில் டிஎன்ஏ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் டப்பா கார்டெல் என்ற இணையத் தொடர் வெளியாகி கவனம் பெற்றது.

Summary

Enna Vilai is proud to be an Official Selection at the Kaia International Film Festival 2026, Istanbul, Turkey

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.