முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

நள்ளிரவில் வழி தவறிய மம்மூட்டிக்கு 10 கிமீ வரை பைக்கில் உதவிய தமிழர்..! வைரலாகும் காட்சிகள்!

கேரளத்துக்கு வழி தெரியாமல் இருந்த நடிகர் மம்மூட்டிக்கு உதவிய தமிழர் பாண்டியன் குறித்து...

News image

வழித்தவறிய மம்மூட்டிக்கு 10 கிமீ வரை பைக்கில் உதவிய பாண்டியன். - படங்கள்: முகநூல் / ஆண்டோ ஜோசப்

Updated On :15 ஆகஸ்ட் 2026, 4:37 pm IST

நடிகர் மம்மூட்டி நள்ளிரவில் கேரளத்துக்குச் செல்ல வழி தெரியாமல் அலைந்துகொண்டிருந்தபோது, பாண்டியன் என்ற தமிழர் உதவியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் மம்மூட்டி தற்போது கேரள - தமிழக எல்லையில் தனது புதிய படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்தப் படத்தை தலைவர் தம்பி தலைமையில் பட இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் காரைக்குடி அருகே நடைபெற்று வந்துள்ளது. படப்பிடிப்பு நள்ளிரவில் முடிவடைந்ததும் கேரளத்துக்குச் செல்ல மம்மூட்டி முடிவெடுத்துள்ளார்.

கூகுள் மேப் உதவியுடன் கேரளத்துக்குச் சென்றுகொண்டிருந்த மம்மூட்டிக்கு திருப்பத்தூர் பகுதியில் சாலை அடைக்கப்பட்டிருந்ததால் வழிதவறியுள்ளார். பின்னர், தங்கியிருந்த விடுதிக்கே செல்ல முடிவெடுத்துள்ளனர்.

பின்னர் போகும் வழியில் சுமார் அதிகாலை 3.30 மணியளவில் பெட்ரோல் பங்க் அருகே ஒருவரிடம் விசாரிக்க, அங்கு ஒருவர் தனது பைக்கில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் வந்து பிரதான சாலை வரைக்கும் வழிகாட்டியுள்ளார். இந்தப் பயணத்தில் நடிகர் மம்மூட்டியுடன் தயாரிப்பாளர், கார் ஓட்டுநர் என பலர் இருந்துள்ளனர்.

பின்னர், பிரதான சாலைவரை வந்ததும் வழியனுப்பியவரிடம் மம்மூட்டி பெயரைக் கேட்டுள்ளார். அவரது பெயர் பாண்டியன் எனக் கூறியுள்ளார். அதற்கு மம்மூட்டி, “ எனது நண்பன்” எனக் கூறியுள்ளார். இந்த விடியோவை ஆண்டோ ஜோசப் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மம்மூட்டிக்கு உதவிய பாண்டியன் என்பவரும் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளார்.

Summary

A Tamil man helped Mammootty—who had lost his way at midnight—by escorting him for 10 km on a bike! The visuals are going viral!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.