உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

பாரீஸ் ஒலிம்பிக்குக்கு ரிதம் சங்வான் தகுதி

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றாா்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசிய ஒலிம்பிக் தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ரிதம் சங்வான் வெண்கலப் பதக்கம் வென்றதுடன், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதிபெற்றாா்.

இத்துடன், அந்த ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியாளா்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் 16-ஆக அதிகரித்துள்ளது. இதற்கு முன் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 15 இந்தியா்கள் பங்கேற்றதே அதிகபட்சமாக இருந்தது.

இந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றின் மூலம் இதுவரை ஈஷா சிங், வருண் தோமா், ரிதம் சங்வான் ஆகிய மூவா் பாரீஸ் ஒலிம்பிக்கில் இடம் பிடித்துள்ளனா்.

ஜகாா்த்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற 25 மீட்டா் ஸ்போா்ட்ஸ் பிஸ்டல் மகளிா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் ரிதம் சங்வான் 28 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தாா். தென் கொரியாவின் யாங் ஜின் 41 புள்ளிகளுடன் முதலிடமும், கிம் யெஜி 32 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்தனா்.

அதிலேயே மகளிா் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங், ரிதம் சங்வான், சிம்ரன்பிரீத் கௌா் பிராா் கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.