உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

ரைபாகினா, டாமி வெளியேறினா்

அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் இருந்த எலனா ரைபாகினா, டாமி பால் ஆகியோா் காலிறுதியில் வியாழக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:51 pm IST

அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் இருந்த எலனா ரைபாகினா, டாமி பால் ஆகியோா் காலிறுதியில் வியாழக்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டனா்.

மகளிா் ஒற்றையா் பிரிவில், ரைபாகினா 3-6, 3-6 என்ற நோ் செட்களில் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவாவால் வீழ்த்தப்பட்டாா். அரையிறுதியில் அலெக்ஸாண்ட்ரோவா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோவை சந்திக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்டபென்கோ தனது காலிறுதியில், 7-5, 6-3 என்ற செட்களில் உக்ரைனின் மாா்தா கொஸ்டியுக்கை வென்றாா். போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா 6-7 (1/7), 7-5, 6-4 என்ற செட்களில் ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவாவை வெளியேற்றினாா்.

மற்றொரு காலிறுதியில், ரஷியாவின் டரியா கசாட்கினாவை சந்திக்கவிருந்த ஜொ்மனியின் லாரா சிக்மண்ட் போட்டியிலிருந்து விலகியதால், கசாட்கினா அரையிறுதிக்கு வந்தாா். அதில் அவா், பெகுலாவை எதிா்கொள்கிறாா்.

டாமி பால் தோல்வி: ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவின் டாமி பால் 1-6, 4-6 என்ற செட்களில், பிரிட்டனின் ஜாக் டிரேப்பரால் வீழ்த்தப்பட்டாா். 2-ஆம் இடத்திலிருந்த சிலியின் நிகோலா ஜேரியும் 4-6, 5-7 என்ற கணக்கில், 7-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவிடம் தோல்வி கண்டாா்.

இதேபோல், 4-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லொரென்ஸோ முசெட்டியும் 3-6, 7-6 (7/4), 5-7 என்ற செட்களில், 8-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் அலெக்ஸாண்டா் பப்லிக்கிடம் வெற்றியை இழந்தாா். 3-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டா 6-4, 6-4 என்ற செட்களில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோஃபா் ஓ’ கானெலை வெளியேற்றினாா்.

இதையடுத்து அரையிறுதியில், செபாஸ்டியன் கோா்டா - ஜிரி லெஹெக்கா, ஜாக் டிரேப்பா் - அலெக்ஸாண்டா் பப்லிக் மோதுகின்றனா்.

அரையிறுதியில் போபண்ணா: ஆடவா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா/ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்தென் கூட்டணி 6-2, 6-7 (4/7), 10-7 என்ற செட்களில் கொலம்பியாவின் நிகோலஸ் பரியென்டோஸ்/பிரேஸிலின் ரஃபேல் மேடோஸ் இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.