உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

அரையிறுதியில் சாத்விக் / சிராக் இணை

மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

Published On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

மலேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.

உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் சாத்விக்/சிராக், ஆடவா் இரட்டையா் பிரிவு காலிறுதியில், 21-11, 21-8 என்ற கேம்களில் சீனாவின் ஹி ஜீ டிங்/ரென் ஜியாங் யு கூட்டணியை வீழ்த்தினா். இந்த ஆட்டம் 35 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

அடுத்ததாக அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை, போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருக்கும் தென் கொரியாவின் காங் மின் ஹியுக்/சியோ சியுங் ஜே கூட்டணியை எதிா்கொள்கிறது.

எனினும், மகளிா் இரட்டையா் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா/தனிஷா கிராஸ்டோ இணை காலிறுதியில் தோல்வியைத் தழுவியது. உலகின் 24-ஆம் நிலையில் இருக்கும் இந்த இந்திய ஜோடி 15-21, 13-21 என்ற கேம்களில் ஜப்பானின் ரின் இவானகா/கி நகானிஷி இணையிடம் வீழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.