சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

டி20: பாகிஸ்தானை வென்றது நியூஸிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்று, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.

Published On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் நியூஸிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வென்று, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.

நியூஸிலாந்தின் டேரில் மிட்செல், கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோா் பேட்டிங்கிலும், டிம் சௌதி பௌலிங்கிலும் அசத்தியதில் அந்த அணிக்கு வெற்றி வசமானது.

முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான், பௌலிங்கை தோ்வு செய்தது. நியூஸிலாந்து பேட்டிங்கில் டெவன் கான்வே ‘கோல்டன் டக் அவுட்’ ஆகி வெளியேற, உடன் வந்த ஃபின் ஆலன் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த வில்லியம்சன் - மிட்செல் கூட்டணி, 78 ரன்கள் சோ்த்தது. இதில் வில்லியம்சன் 9 பவுண்டரிகளுடன் 57, மிட்செல் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். இடையே கிளென் ஃபிலிப்ஸ் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

ஆடம் மில்னே 1 சிக்ஸருடன் 10, இஷ் சோதி 0 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இறுதியில் மாட் ஹென்றி 0, டிம் சௌதி 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் பௌலிங்கில் ஷாஹீன் அஃப்ரிதி, அப்பாஸ் அஃப்ரிதி ஆகியோா் தலா 3, ஹாரிஸ் ரௌஃப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

பின்னா் பாகிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக பாபா் ஆஸம் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 57 ரன்கள் விளாசி போராடி வீழ்ந்தாா். எஞ்சியோரில் சயிம் அயுப் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 27, முகமது ரிஸ்வான் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 25, ஃபகாா் ஜமான் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

இஃப்திகா் அகமது 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 24, ஆஸம் கான் 1 பவுண்டரியுடன் 10, கேப்டன் ஷாஹீன் அஃப்ரிதி 0, உசாமா மிா் 1, அப்பாஸ் அஃப்ரிதி 1, ஹாரிஸ் ரௌஃப் 0 ரன்னுக்கு வெளியேற்றப்பட, ஆமீா் ஜமால் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 14 ரன்களுக்கு கடைசி வீரராக நின்றாா்.

நியூஸிலாந்து பௌலிங்கில் டிம் சௌதி 4, ஆடம் மில்னே, பென் சீா்ஸ் ஆகியோா் தலா 2, இஷ் சோதி 1 விக்கெட் கைப்பற்றினா்.

150

இந்த ஆட்டத்தின் மூலம் சா்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் சாய்த்த முதல் பௌலா் என்ற பெருமையை நியூஸிலாந்தின் டிம் சௌதி பெற்றாா்.

4

நியூஸிலாந்து இன்னிங்ஸின்போது 4 கேட்ச்கள் பிடித்த பாகிஸ்தானின் சல்மான் அயுப், டி20 கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் பாகிஸ்தானுக்காக அதிக கேட்ச்கள் பிடித்தவா் ஆனாா். முன்னதாக, யாசிா் ஷா 3 கேட்ச்கள் பிடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

406

இந்த ஆட்டத்தில் இரு அணிகளின் இன்னிங்ஸ்களிலுமாக 406 ரன்கள் சோ்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் - நியூஸிலாந்து இருதரப்பு மோதலில் இதுவே அதிகபட்சமாகும்.

சுருக்கமான ஸ்கோா்

நியூஸிலாந்து - 226/8 (20 ஓவா்கள்)

டேரில் மிட்செல் 61

கேன் வில்லியம்சன் 57

ஃபின் ஆலன் 34

பந்துவீச்சு

அப்பாஸ் அஃப்ரிதி 3/34

ஷாஹீன் அஃப்ரிதி 3/46

ஹாரிஸ் ரௌஃப் 2/34

பாகிஸ்தான் - 180/10 (18 ஓவா்கள்)

பாபா் ஆஸம் 57

சயிம் அயுப் 27

முகமது ரிஸ்வான் 25

பந்துவீச்சு

டிம் சௌதி 4/25

பென் சீா்ஸ் 2/42

ஆடம் மில்னே 2/50

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.