ரூ.100 கோடிக்கு செல்ஸி கிளப்பில் இணைந்த கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ்!
செல்ஸி கால்பந்து கிளப்பில் இணைந்த ஆர்ஜென்டீன கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் குறித்து...

எமிலியானோ மார்டினெஸ் - படங்கள்: எக்ஸ் / செல்ஸி எப்ஃசி.
ஆர்ஜென்டீன கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் (33 வயது) ஆஸ்டன் வில்லா கிளப்பில் இருந்து செல்ஸி கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார்.
ஆர்ஜென்டீன அணி கடந்த 2022 உலகக் கோப்பை வென்றதில் கோல்கீப்பர் எமிலியானோ மார்டினெஸ் பங்கு சிறப்பாக இருந்தது. 2026 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 10 கோல்களை தடுத்து அசத்தியதும் குறிப்பிடத்தக்கது.
எமிலியானோ மார்டினெஸ் தனது 17 வயதில் ஆர்செனல் அணியில் விளையாடினார். அங்கிருந்து பல அணிகளில் லோன் மூலம் பங்கேற்றுள்ளார். 2019/20 சீசனில் ஆர்செனல் அணிக்கு எஃப்ஏ கோப்பை வெல்ல உதவினார்.
அடுத்ததாக, எமிலியானோ மார்டினெஸ் ஆஸ்டன் வில்லா கிளப்பில் இணைவதற்கு முன்பு கம்யூனிட்டி ஷீல்டு வென்றார். 2020 முதல் 2026 வரை அந்த கிளப்பில் விளையாடினார்.
தற்போது, செல்ஸி கிளப்பில் மூன்று ஆண்டுகளுக்கு 7.5 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ. 96.83 கோடி) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து எமிலியானோ மார்டினெஸ், “செல்ஸிக்கு வருவது என்பது எனக்கும் எனது குடும்பத்திற்கும் எளிமையான முடிவாக இருந்தது. மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். விளையாட ஆர்வமாக இருக்கிறேன். எனது 100 சதவிகித உழைப்பைக் கொடுப்பேன். எனது கிளப், அணியினர் பெருமைக் கொள்ளும் விதத்தில் விளையாடுவேன்” எனக் கூறியுள்ளார்.
He's at the Chels. ð
— Chelsea FC (@ChelseaFC) August 30, 2026
Summary
Chelsea sign Argentine goalkeeper Emiliano Martinez from Aston Villa
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







