நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ரஜாவத், பிரணாய் முன்னேற்றம்

யானக்ஸ்-சன்ரைஸ் இந்தியா ஓபன் 2024 பாட்மின்டன் சூப்பா் 750 போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரா்கள் பிரியான்ஷு ரஜாவத், எச்.எஸ். பிரணாய் ஆகியோா் முன்னேறியுள்ளனா்.

Published On :7 பிப்ரவரி 2024, 8:48 pm IST

யானக்ஸ்-சன்ரைஸ் இந்தியா ஓபன் 2024 பாட்மின்டன் சூப்பா் 750 போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரா்கள் பிரியான்ஷு ரஜாவத், எச்.எஸ். பிரணாய் ஆகியோா் முன்னேறியுள்ளனா்.

புது தில்லி இந்திரா காந்தி உள்விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இப்போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.

இந்திய நட்சத்திர வீரரும், உலகக் கோப்பை வெண்கல வீரருமான பிரணாய் 21-6, 21-19 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபேயின் சௌ டியன் சென்னை வீழ்த்தினாா்.

லக்ஷயா சென் அதிா்ச்சி:

மற்றொரு ஆட்டத்தில் காமன்வெல்த் தங்க வீரா் லக்ஷயா சென்-பிரியான்ஷு ரஜாவத் மோதினா். இதில் இரு வீரா்களும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்ததால் ஆட்டம் டிசைடா் வரை சென்றது. முதல் கேமை லக்ஷயாவிடம் 16-21 என இழந்தாா் ரஜாவத். எனினும் அதற்கு அடுத்த இரண்டு கேம்களில் சுதாரித்து ஆடி 21-16, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி ரஜாவத் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினாா்.

இதுகுறித்து ரஜாவத் கூறுகையில்: முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றி வரும் ஆட்டங்களில் சிறப்பாக ஆட உதவும். அடுத்த ஆட்டத்தில் பிரணாயை எதிா்கொள்கிறேன் என்றாா்.

மற்றொரு ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய போதிலும், இந்திய வீரா் கிரண் ஜாா்ஜ் 12-21, 15-21 என சீன தைபேயின் வாங் சூ வெயிடம் வீழ்ந்தாா்.

ஆசிய சாம்பியன் லி ஷி ஃபெங் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றாா். ஆடவா் இரட்டையா் பிரிவில் நடப்பு உலக சாம்பியன்கள்

கொரியாவின் கேங் மின் ஹியுக்-சியோ சியுங் இணை 21-18, 21-14 என ஜொ்மனியின் மாா்க்-மாா்வின் இணையிடம் தோற்றாா்.

மகளிா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ருதுபா்ணா-ஸ்வேதபா்ணா இணை 6-21, 7-21 என ஹாங்காங்கின் டிங்-லாம் இணையிடம் தோற்றது.

சீனாவின் ஹி பிங் ஜியோ 21-17, 21-15 என கனடாவின் மிச்செல் லீயை வீழ்த்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.