நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை!

ஜிம்பாப்வேவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை டி20 தொடரைக் கைப்பற்றியது.

Published On :7 பிப்ரவரி 2024, 8:48 pm IST

ஜிம்பாப்வேவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை டி20 தொடரைக் கைப்பற்றியது.

ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான 3-வது மற்றும்  கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்தது. 

ஜிம்பாப்வே அணி 14.1 ஓவர்களில் 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிரியன் பென்னட் 29 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் கேப்டன் வனிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளைக்  கைப்பற்றினார். மேத்யூஸ் மற்றும் மஹீஷ் தீக்‌ஷனா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தில்ஷன் மதுஷங்கா மற்றும் தனஞ்ஜெயா டி சில்வா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்கா மற்றும் குஷல் மெண்டிஸ் களமிறங்கினர். குஷல் மெண்டிஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் நிசங்காவுடன் டி சில்வா ஜோடி சேர்ந்தார். இந்த இணை இலங்கையை வெற்றி பெறச் செய்தது. 10.5 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது. பதும் நிசங்கா 39 ரன்களுடனும் (5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்), தனஞ்ஜெயா டி சில்வா 15 ரன்களுடனும் (2 பவுண்டரிகள்) களத்தில் இருந்தனர். 

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வனிந்து ஹசரங்கா ஆட்டநாயகனாகவும், ஏஞ்சலோ மேத்யூஸ் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.